- Advertisement -
Homeபொழுதுபோக்குஎப்பவும் இங்கே ஒரே சூப்பர் ஸ்டார் தான், விளம்பர போஸ்டர்களில் கட் அவுட்களில் அலப்பரை கிளப்பும்...

எப்பவும் இங்கே ஒரே சூப்பர் ஸ்டார் தான், விளம்பர போஸ்டர்களில் கட் அவுட்களில் அலப்பரை கிளப்பும் ரஜினி ரசிகர்கள் – களை கட்டும் ஜெயிலர் 2 திருவிழா!

- Advertisement -

நாளை காலை 9 மணிக்கு தமிழ்நாடு கேரளம் கர்நாடகா ஆந்திரா தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் 2 படம் வெளியாக உள்ளது. 2023ம் ஆண்டில் வெளியான ஜெயிலர் படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பிறகு 3 ஆண்டுகள் ஆன நிலையில் இப்போது ஜெயிலர் 2 படம் வெளியாக உள்ளது. இதை ரஜினி ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். கட் அவுட்கள் பேனர்கள் வைத்தும் போஸ்டர்கள் ஒட்டியும் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதில் 12 பிஎம் ( பிரதமர்) பார்த்தாச்சு, 8 சிஎம் ( முதல்வர்) பாத்தாச்சு. ஆனா எப்போதுமே ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் என்ற வாசகங்கள் அடங்கிய பேனர்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

சற்று முன்