- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜயகாந்த் மகன் சண்முகப் பாண்டியன் நடிக்கும் புதிய படம், இதில் சரத்குமாருக்கு இப்படி ஒரு...

நடிகர் விஜயகாந்த் மகன் சண்முகப் பாண்டியன் நடிக்கும் புதிய படம், இதில் சரத்குமாருக்கு இப்படி ஒரு கேரக்டரா? ஓ போடு நடிகையின் மகள்தான் ஹீரோயினா? போட்றா வெடிய!

- Advertisement -

நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமாவில், கடந்த 1980களில் முன்னணி ஹீரோவாக வலம் வந்தவர். நடிகர்கள் ரஜினிகாந்த் கமலஹாசனுக்கு அடுத்த நிலையில் இருந்தவர் விஜயகாந்த். பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். கம்பீரமான நடிப்பும், அதிரடியான சண்டை காட்சிகளும் விஜயகாந்தின் ஸ்பெஷாலிட்டியாக ரசிகர்களை கவர்ந்தது.

தமிழ் சினிமாவில் ஷூட்டிங் ஸ்பாட்டில் பெரிய நடிகர் முதல் லைட் பாய் வரை அனைவருக்கும் ஒரே விதமான உணவு என்ற ஒரு நடைமுறையை கொண்டு வந்ததும் நடிகர் விஜயகாந்த். இது ஏற்கனவே நடிகர் எம்ஜிஆர் செயல்படுத்திய ஒரு திட்டம்தான். ஆனால் பிறகு முன்னணி நடிகர்கள் அதை கண்டு கொள்வதில்லை. சினிமா புரட்சி பேசும் ரஜினி, கமல், விஜய், அஜீத்குமார் கூட இதை நடைமுறைப்படுத்தவில்லை.

- Advertisement -

அதனால்படப்பிடிப்புகளில் பெரிய நடிகர்களுக்கு விருந்து போல உணவு வகைகளும், நடுத்தரமான தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஒரு விதமான உணவு வகைகளும், கீழ் மட்டத்தில் இருக்கும் தொழிலாளர்களுக்கு ஒரு விதமான உணவும் வழங்கப்பட்டு வருகிறது. இது மற்ற நடிகர்களின் படபிடிப்புகளில் நடந்தாலும் விஜயகாந்த் படத்தின் படப்பிடிப்பை பொறுத்தவரை அனைவருக்கும் சரிசமமான உணவு என்பது நடைமுறையில் இருந்தது.

நடிகர் விஜயகாந்துக்கு விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் என 2 மகன்கள் உள்ளனர். இதில் இளைய மகன் சண்முக பாண்டியன் சினிமாவில் நடிகராக இருக்கிறார். அவரது நடிப்பில் உருவான படைத்தலைவன் படத்தை அடுத்து, இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிகர் சண்முக பாண்டியன் நடிக்கிறார்.

- Advertisement -

இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகர் சரத்குமார் நடிக்கிறார். புலன் விசாரணை படத்தில் டாக்டர் கேரக்டரில் நடிகர் சரத்குமார் நடித்துதான் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதற்கு முன்பு சின்ன சின்ன கேரக்டர்களில் சில படங்களில் நடிகர் சரத்குமார் நடித்திருந்தாலும், விஜயகாந்துடன் நடித்த புலன் விசாரணை படத்தில்தான், பம்பாய் டாக்டர் என்ற மிகப்பெரிய ஒரு அடையாளத்தை சரத்குமாருக்கு பெற்று தந்தது.

இப்போது அவரது மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் புதிய படத்தில் நடிகர் சரத்குமார் நடிக்கிறார். பொன்ராம் இயக்கும் இந்த படத்தில் சரத்குமார் பெரிய ரவுடியாகவும், சண்முக பாண்டியன் சின்ன ரவுடியாகவும் நடிக்கின்றனர். இந்த படத்தில் கதாநாயகியாக, சண்முக பாண்டியனுக்கு புதுமுக நடிகை தாரணிகா ஜோடியாக நடிக்கிறார். ஓ போடு பாடலில் ஆடிய, நாட்டாமை படத்தில் டீச்சராக நடித்த நடிகை ராணியின் மகள்தான் தாரணிகா. குரூப் டான்ஸர் ஆக இருந்த நடிகை ராணியின் மகள் கதாநாயகியாக ஒரு சுற்று வருவாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

- Advertisement -

சற்று முன்