- Advertisement -
Homeபொழுதுபோக்குஎனக்கு அது தெரிந்த விஷயம்தான், மீண்டும் மீண்டும் அதைகேட்டு என்னை வற்புறுத்தாதீங்க - ஓபன் ஸ்டேட்மென்ட்...

எனக்கு அது தெரிந்த விஷயம்தான், மீண்டும் மீண்டும் அதைகேட்டு என்னை வற்புறுத்தாதீங்க – ஓபன் ஸ்டேட்மென்ட் விட்ட இயக்குநர் வெற்றிமாறன்

- Advertisement -

இயக்குநர் வெற்றிமாறன், தமிழ் சினிமாவில் மிகவும் கவனிக்கப்படுகிற ஒரு இயக்குநராக இருப்பவர். பொல்லாதவன் என்ற தனுஷ் நடித்த படம் மூலம், தமிழ் சினிமாவுக்குள் இயக்குநராக அறிமுகமானார். இவரது ஆடுகளம் படம் பெரிய அளவில் பேசப்பட்டது.

மதுரைவாழ் மக்களின் யதார்த்த வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக இந்த படம் அமைந்திருந்தது. குறிப்பாக சேவல் சண்டையை மையப்படுத்தி இந்த படத்தில், ஒவ்வொரு கேரக்டரும் ஒரு இயக்குநருக்கான தனி சவால்களாக இருந்தன. அதை அட்டகாசமாக வெற்றிமாறன் கையாண்டு இருந்தார்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து வடசென்னை, அசுரன் படங்களும் வெற்றிமாறன் திறமைக்கு சான்றாக இருந்தன. குறிப்பாக காமெடி நடிகராக இருந்த சூரியை, ஒரு சிறந்த ஹீரோவாக விடுதலை படத்தில், வெற்றிமாறன் காட்டி இருந்தார். குமரேசன் என்ற கேரக்டரில் சூரியும், வாத்தியார் என்ற கேரக்டரில் விஜய் சேதுபதியும் அந்த படத்தில் வாழ்ந்திருந்தனர்.

வெற்றி மாறனை பொருத்தவரை, அவரும் வன்முறை நிறைந்த காட்சிகளை சித்தரிக்கும் படங்களை தருகிறார் என்ற குற்றச்சாட்டு உண்டு. பா.ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்றவர்களுக்கும் அதே விமர்சனம் உள்ளது. ஆனால், இந்த 3 பேருமே வாழ்ந்த கதைகளை, நடந்த விஷயங்களை பதிவு செய்கின்றனர். ஆனால் நெல்சன், லோகேஷ் கனகராஜ் போன்ற இயக்குநர்கள் வன்முறை களங்களையே கதையாக்கி, படம் எடுக்கின்றனர்.

- Advertisement -

இதற்கிடையே, லியோ படத்தின் வெற்றிவிழா சமீபத்தில் நடந்தது. இதில் பேசிய டைரக்டர் லோகேஷ் கனகராஜ், இயக்குநர் வெற்றிமாறனை என் படத்தில் நடிக்க வைக்க வேண்டும். மூன்றுமுறை கேட்டும் அவர் மறுத்துவிட்டார். எப்படியும் அவரை நடிக்க வைத்துவிடுவேன், என்று கூறியிருந்தார்.

இன்று சென்னையில் நடந்த மாயவலை என்ற படத்தின் பிரமோசன் நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் வெற்றிமாறன், எனக்கு நடிக்க தெரியும். ஆனால் நடிக்க விரும்பவில்லை. நடிப்பு, இயக்கம் என்பது இரண்டுமே வெவ்வேறு விதமான சவாரிகள். ஒரே நேரத்தில் இரண்டு விதமான சவாரிகளை என்னால் செய்ய முடியாது. இரண்டையும் சமாளிக்க சிலரால் முடியும். என்னால் அது முடியாது. பல இயக்குநர்கள், என்னை நடிக்க அழைக்கின்றனர். எனக்கு நடிக்க விருப்பம் இல்லை. இனிமேல் வற்புறுத்த வேண்டாம் என, தெளிவாக தனது முடிவை வெற்றிமாறன் கூறி இருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்