கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியான படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த இந்த படம், பெரிய அளவில் வசூலில் சாதனை படைத்தது. மொத்தம் 580 கோடி ரூபாய்க்கு மேல் மொத்த வசூலை குவித்தது. இதையடுத்து சக்சஸ் மீட் நடத்தி, படத்தில் நடித்த நடிகர், நடிகையர் கவுரவிக்கப்பட்டனர்.
லியோ படத்தை அடுத்து, விஜய் இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் 68 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அப்பா, மகன் என 2 வேடங்களில் நடிக்கும் விஜய்க்கு சிநேகா, மீனாட்சி சவுத்ரி என இரு ஹீரோயின்கள் நடிக்கின்றனர். இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, விடிவி கணேஷ், பிரேம்ஜி, மைக் மோகன், ஜெயராம் உள்ளிட்டோர் நடிப்பது உறுதியாகி உள்ளது.
கடந்த லியோ படம், வசூலில் சாதனை புரிந்தாலும் விமர்சன ரீதியாக பலவிதங்களில் கடுமையாக பேசப்பட்டது. அதுபோன்ற விமர்சனங்களுக்கு இடமளிக்காமல் இந்த படத்தை சிறந்த முறையில் தர வெங்கட்பிரபு தீவிரம் காட்டி வருகிறார். விஜய் இந்த படத்துக்கு பிறகு, கார்த்திக் சுப்புராஜ் படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இப்போது ஓடிடியில் லியோ படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்ட போது கிடைத்த வரவேற்பை போலவே, ஓடிடி தளத்திலும் லியோ படத்தை ரசிகர்கள் வெகுவாக ரசித்து பார்த்து வருகின்றனர். படம் பார்த்த பலரும், இப்போது ஓடிடியில் லியோவை பார்க்கவும் ஆர்வம் காட்டுவது, ஓடிடியிலும் இந்த படத்தை வெற்றி பெறச் செய்திருக்கிறது.
இந்நிலையில், வரும் 21ம் தேதி நெட்பிளிக்ஸ்சில் லியோ படம் இங்கிலீஸ் வெர்சனில் ரிலிஸ் ஆகிறது. அதாவது, படத்தில் இங்கிலீஸ் சப் டைட்டிலுடன் லியோ படத்தை ரசிகர்கள் காணலாம். அதாவது இதில் விஜய் ஆங்கிலத்தில் தான் படம் முழுக்க பேசுவார். படத்தில் நடித்துள்ள அனைத்து கேரக்டர்களும் ஆங்கிலத்தில்தான் பேச உள்ளனர்.
இதுவரை தமிழ் சினிமா ரசிகர்கள், ஹாலிவுட் படங்களின் ஹீரோக்கள் ஆங்கிலத்தில் பேசியதை தான் திரையில் பார்த்திருக்கிறார். இப்போது லியோ படத்தில், இங்கிலீஸ் வெர்சனில் தமிழ் நடிகர் விஜய் பேசுவதை ரசிகர்கள் பார்க்க உள்ளனர் என்பது ஒரு வித்யாசமான அனுபவம்தான். ஆனால் பெரும்பாலான ரசிகர்கள் ஆங்கிலம் தெரியாதவர்கள் என்பதால், இனி விஜய் படங்களை ஆங்கிலத்தில் பார்க்க ஆங்கிலம் கற்றுக்கொள்வதும் மிக முக்கியம்.





