- Advertisement -
Homeபொழுதுபோக்குகார்த்திக் சுப்புராஜ் - சூர்யா கூட்டணியில் இணைந்த மிக முக்கியமான நடிகர்... எதிர்பாராத ட்விஸ்ட்டால் ரசிகர்கள்...

கார்த்திக் சுப்புராஜ் – சூர்யா கூட்டணியில் இணைந்த மிக முக்கியமான நடிகர்… எதிர்பாராத ட்விஸ்ட்டால் ரசிகர்கள் ஆச்சரியம்…

- Advertisement -

ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்தைக் கொடுத்து மீண்டும் தன் பக்கம் ரசிகர்களை ஈர்த்து இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே சூர்யா ஆகியோர் இணைந்து நடித்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

 

முதல் பாதியில் அதிரடி காட்சிகளையும், இரண்டாம் பாதியில் பழங்குடியின மக்களின் பிரச்சினைகளையும் பேசி இருந்தார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். அதிலும் கிளைமாக்ஸ் காட்சிகளில், அவர் ஜிகர்தண்டா திரைப்படத்தை இணைத்திருந்த விதம் பலருக்கும் பிடித்துப் போனது.

 

எதிர்பாராத வெற்றியை இந்த திரைப்படம் ருசித்த நிலையில், அடுத்ததாக அவர் சூர்யாவுடன் இணைந்திருக்கிறார். இந்தக் கூட்டணியும் திடீரென தான் அறிவிக்கப்பட்டது. முதலில் சூர்யா சுதா கொங்கரா திரைப்படத்தில் நடிப்பதாகத்தான் இருந்தது. இதற்கான அறிவிப்பும் வெளியானது.

 

படத்திற்கு புறநானூறு என டைட்டில் வைக்கப்பட அதில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா உள்ளிட்டோர் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது. 2d என்டர்டைன்மென்ட் நிறுவனம் சார்பில் சூர்யா ஜோதிகா இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரிக்க இருந்தனர். ஆனால் கடைசி நேரத்தில் படத்தின் பணிகள் நிறுத்தப்பட்டன.

 

இயக்குனர் பாலாவின் வணங்கான் திரைப்படத்தை தொடர்ந்து, புறநானூறு படத்திலும் சுதா கொங்கராவை சூர்யா நிராகரித்ததாக பலரும் கூறினர். இப்படியான சூழலில் தான் தனது 44-வது திரைப்படத்திற்காக கார்த்திக் சுப்புராஜ் உடன் சூர்யா இணைந்திருக்கிறார். இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமானில் நடைபெற்றது.

 

இதில் கதாநாயகியாக, பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். கருணாகரன் உள்ளிட்டோரும் படத்தில் இடம்பெற்றுள்ளனர். கேங்ஸ்டர் பாணியில் இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து சென்னையில் படப்பிடிப்பை கார்த்திக் சுப்புராஜ் எடுத்து வருகிறார். இந்த நிலையில் சூர்யாவின் 44வது திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ் இணைந்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு படத்தில் முக்கிய கதாபாத்திரம் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

சற்று முன்