தமிழ் சினிமாவில் இப்போதைக்கு ரஜினி, கமலுக்கு அடுத்தபடியாக இருப்பவர்கள் விஜய், அஜீத். அவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்தாலும் அவர்கள் ரசிகர்கள் எப்போதும் எதிரும் புதிருமாக தான் நிற்கின்றனர். ஆனால், அவர்கள் பொது இடங்களில் ஏதேச்சையாக சந்தித்தால் கூட கைகுலுக்கி, கட்டித்தழுவி அன்பை பரிமாறிக் கொள்கின்றனர்.
லியோ படத்தை தொடர்ந்து விஜய் இப்போது வெங்கட்பிரபு இயக்கும் விஜய் 68 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு, தாய்லாந்து நாட்டில் அதிரடி சண்டை காட்சிகளுடன் நடந்து வருகிறது. இதில் பங்கேற்க கடந்த 2ம் தேதி காலையில், விஜய் தாய்லாந்துக்கு விமானத்தில் புறபட்டுச் சென்றார்.
அதேபோல் அஜீத்குமாரும், கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக, வெளிநாட்டில் அஜர்பைஜானில் விடாமுயற்சி ஷூட்டிங்கில் இருந்து வருகிறார். இந்த படத்தை மகிழ் திருமேனி டைரக்ட் செய்கிறார். இந்த படத்தில் திரிஷா, அஜீத்குமாருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். லியோ படத்தை தொடர்ந்து, இந்த படத்திலும் அர்ஜூன் வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் நடித்த லியோ படத்துக்கு அனிரூத் இசையமைத்து இருந்தார். ஆனால், படத்தின் இசை பெரிய அளவில் பேசப்படவில்லை. அதற்கு முந்தைய படமான ஜெயிலர் படத்துக்கும் அனிரூத் தான் இசை அமைத்திருந்தார். அதில் பிஜிஎம் வேற லெவலில் பேசபட்டு இருந்தது. தொடர்ந்து பல படங்களுக்கு கமிட் ஆகி வரும் அனிரூத், தனது சம்பளத்தை ரூ. 10 கோடியாக உயர்த்தி விட்டார்.
இதற்கிடையே விஜய் 68 படத்துக்கு, இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இவர் பி்னனணி இசை தர தாமதிக்கிறார் என பலத்த சர்ச்சை உள்ள நிலையில், விஜய் படத்துக்கு அதுவும் தனது சொந்த சித்தப்பா ( கங்கை அமரன்) மகன் வெங்கட்பிரபு இயக்கும் படம் என்பதால், இசை விஷயத்தில் தாமதம் இருக்காது என உறுதியாக நம்பப்படுகிறது.
சமீபத்தில், ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவிடம், மங்காத்தா படத்தில் உங்களது இசையமைப்பு, பின்னணி இசை பெரிய அளவில் பேசப்பட்டது. இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய் 68 படத்திலும் அதே போல் இசை இருக்குமா, என்று கேட்டனர். அததற்கு கண்டிப்பாக இருக்கும் என்று கூறி, விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறார் யுவன் ஷ்ஙகர் ராஜா. அப்போ, வேற லெவல்ல மியூசிக் இருக்குமுன்னு சொல்லுங்க என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.





