- Advertisement -
Homeபொழுதுபோக்குவெற்றிமாறனுடன் இணையும் திரைப்படத்தில் சிம்புவுக்கு இப்படி ஒரு ரோலா... அசுரன் இயக்குனரின் அசத்தலான சம்பவம் ரெடி...

வெற்றிமாறனுடன் இணையும் திரைப்படத்தில் சிம்புவுக்கு இப்படி ஒரு ரோலா… அசுரன் இயக்குனரின் அசத்தலான சம்பவம் ரெடி…

- Advertisement -

வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த டிசம்பர் மாதம் விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் செய்யப்பட்ட இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. சொல்லப்போனால் வெற்றிமாறன் எடுத்த திரைப்படங்களிலேயே, மிகவும் சுமாரான விமர்சனத்தை பெற்ற திரைப்படம் இதுதான் என்று கூறலாம்.

இதனைத் தொடர்ந்து அவர் சூர்யாவுடன் இணைந்து வாடிவாசல் திரைப்படத்தை செய்வதாகதான் இருந்தது. இதனை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவும் பலமுறை உறுதிப்படுத்தியிருந்தார். ஆனால் மறுபடியும் இந்த கூட்டணி இணைவதில் தாமதம் ஏற்பட, சிலம்பரசனை வைத்து வெற்றிமாறன் திரைப்படத்தை இயக்குவதாக தகவல் வெளியானது.

- Advertisement -

இதனை உறுதிப்படுத்தும் வகையில் அறிமுக வீடியோவின் சூட்டிங் தளத்திலிருந்து, ஒரு புகைப்படம் ரிலீஸ் ஆனது. அதில் சிலம்பரசன் வெற்றிமாறன் மற்றும் நெல்சன் ஆகியோர் இருந்தனர். அப்போதே இந்த திரைப்படம் வடசென்னையின் இரண்டாம் பாகமாகதான் இருக்கும் என்று பலரும் கூறி வந்தனர்.

ஆனால் இதற்கு தனுஷ் தடையாக இருப்பதாகவும், வடசென்னை திரைப்படத்தின் தயாரிப்பாளரான அவர் என்ஓசி சான்றிதழ் கொடுக்க மறுப்பதாகவும் பேச்சு அடிபட்டது. இதனைத் தொடர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்ட வெற்றிமாறன் அது தொடர்பான விளக்கம் அளித்தார். அதில் சிம்புவுடன் இணையும் திரைப்படம் வடசென்னை படத்தின் இரண்டாம் பாகம் என்றும், வடசென்னை இரண்டாம் பாகம் என்றால் அது அன்புவின் எழுச்சி தான், அது தனுஷை வைத்துதான் செய்ய முடியும் என்றும் கூறியிருந்தார்.

- Advertisement -

அதேசமயம் வடசென்னை உலகத்தில்தான் சிம்புவின் திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும், அதில் நடித்த கதாபாத்திரங்கள் இதிலும் இடம்பெற இருப்பதாகவும் கூறினார். இது தொடர்பாக தனுசை தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் என்ஓசி சான்றிதழ் அளிக்க உறுதி அளித்ததாகவும் தெரிவித்தார்.

இந்த நிலையில் வெற்றிமாறனுடன் சிம்பு இணையும் திரைப்படத்தில் அவருக்கு இரண்டு விதமான கெட்டப்கள் கொடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒன்று வயது முதிர்ந்த கதாபாத்திரம் என்றும், மற்றொன்று இளமையான கதாபாத்திரத்திற்கான தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் படத்திற்கான அறிவிப்பு வீடியோ வெளியாகும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்