- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னுடைய முதல் படமே இதுதான்… ஆனால் இப்போதுதான் அதை எடுக்கிறேன் - இயக்குனர் ஏஆர்...

என்னுடைய முதல் படமே இதுதான்… ஆனால் இப்போதுதான் அதை எடுக்கிறேன் – இயக்குனர் ஏஆர் முருகதாஸ் சொன்ன சீக்ரெட்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நட்சத்திர இயக்குனர்களில் வரிசையில் ஒருவர்தான் ஏஆர் முருகதாஸ். தீனா ரமணா கஜினி துப்பாக்கி கத்தி சர்கார் போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். வித்யாசமான கதை களத்தில் சமூக விழிப்புணர்வு கொண்ட படங்களை தரும் முக்கிய படைப்பாளிகளில் ஒருவராக இயக்குனர் ஏஆர் முருகதாஸ் உள்ளார்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அவரது இயக்கத்தில் வெளியான சில படங்கள் மிக மோசமான தோல்வியை தழுவின. குறிப்பாக நடிகர் ரஜினிகாந்த் நடித்த தர்பார், பாலிவுட் நடிகர் சல்மான்கான் நடித்த சிக்கந்தர் போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

- Advertisement -

அடுத்ததாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ருக்மணி வசந்த் உள்ளிட்டோர் நடித்த மதராஸி படமும் இந்த ஆண்டில் வெளியானது. இது தோல்வி படம் இல்லை என்றாலும் எதிர்பார்த்த அளவுக்கு பெரிய அளவில் வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. மதராஸி படமும் சுமாரான ஒரு வரவேற்பை மட்டுமே பெற்றது.

இந்நிலையில் அவர் நடிகர் சிம்புவை வைத்து ஏஆர் முருகதாஸ் ஒரு படம் இயக்க உள்ளதாக ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்கின்றனர். ஏனென்றால் ரஜினி சல்மான்கான் சிவகார்த்திகேயன் நடித்த படங்கள் பெரிய அளவில் ஹிட் ஆகாததால் சிம்பு கமிட் ஆக வாய்ப்பில்லை என்று தெரிய வந்துள்ளது.

- Advertisement -

இதற்கிடையே இயக்குனர் முருகதாஸ் சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்று பேசினார். அப்போது ஏஆர் முருகதாஸ் கூறியதாவது, என்னுடைய அடுத்த படமாக நான் நீண்ட ஆண்டுகளாக உருவாக்க ஆசைப்பட்ட கிராபிக்ஸ் குரங்கு என்ற படத்தை தான் இயக்கப் போகிறேன். இது முழுக்க முழுக்க குழந்தைகளுக்கான படம்.

இதுதான் என்னுடைய முதல் படமாக உருவாக்க வேண்டும் என்று நான் நினைத்திருந்தேன். இந்த கதையை நான் உதவி இயக்குனராக பணிசெய்த காலகட்டத்திலேயே எழுதி இருக்கிறேன் என்று ஏஆர் முருகதாஸ் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார். ஏஆர் முருகதாஸ் இயக்கிய முதல் படம் அஜீத்குமார் நடித்த தீனா என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்