எப்போதுமே ஒரு திரைப்படம் முழுக்க முழுக்க இயக்குனரின் கட்டுப்பாட்டில் அவரது விருப்பத்தின்படி முழுமையாக உருவானால் மட்டுமே அந்த படம் ரசிகர்களிடம் கண்டிப்பாக ஜெயிக்கும். அதே நேரத்தில் படத்தின் ஹீரோ, படத்தின் தயாரிப்பாளர்களின் குறுக்கீடும் இடையூறும் இருந்தால் அந்த படம் நிச்சயமாக ஜெயிக்காது. ஜெயிக்கவும் வாய்ப்பில்லை. அப்படி ஒரு இடியாப்ப சிக்கலில் தாய்கிழவி பட இயக்குனர் தவித்து வருவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
ஒரு மாறுபட்ட திரைக்கதையில் காமெடி கலந்த அதே நேரத்தில் சிந்திக்க வைக்கும் ஒரு கதைக்களத்தில் தாய்கிழவி படத்தை இயக்கி வெற்றி பெற்றவர் அறிமுக இயக்குனர் சிவக்குமார் முருகேசன். இப்போது அவரது இயக்கத்தில் உருவாகி வரும் சேயோன் என்ற 2வது படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார்.
இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த சூழலில் இந்த படத்தில் சண்டை பயிற்சியாளராக இருந்த சூப்பர் சுந்தர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக அன்பறிவ் ஸ்டண்ட் மாஸ்டர் கமிட் செய்யப்பட்டுள்ளார்கள். இது தயாரிப்பாளர் கமலின் உத்தரவுபடி நடந்துள்ளது.
கிராமப்புற கதைக்களத்தில் உருவாகும் சேயோன் படத்தில் வரும் சண்டை காட்சிகள் மிக பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஹாலிவுட் தரத்தில் சண்டை காட்சிகளை உருவாக்கும் அன்பறிவ் மாஸ்டர் இதில் கமிட் செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் தாய்கிழவி படத்தின் ஒளிப்பதிவாளர் விவேக் விஜயகுமார் சேயோன் படத்தில் இருந்து விலக்கப்பட்டு வேறு ஒரு ஒளிப்பதிவாளர் கமிட் செய்யப்பட்டுள்ளார். ஆக மொத்தம் இந்த படம் இயக்குனர் விரும்புகிற ஒரு படமாக இல்லாமல் ஹாலிவுட் படத்தில் வரும் சண்டைக்காட்சிகளுடன் உருவாகிறது. மேலும் ஒளிப்பதிவும் வேறு லெவலில் இருக்க கமல்ஹாசன் திட்டமிட்டு ஒளிப்பதிவாளரை மாற்றியுள்ளார்.
சூர்யா நடிப்பில் கமர்ஷியல் ஹிட் கொடுத்த கருப்பு படம் போலவே, இந்த சேயோன் படமும் இருக்க வேண்டும் என்று ஹீரோ சிவகார்த்திகேயனும், தயாரிப்பாளர் கமல்ஹாசனும் விரும்புகின்றனர். அப்படி ஒரு படமாக உருவானால் அது தாய்கிழவி பட இயக்குனரிட் படமாக அவரது சொந்த படைப்பாக அது இருக்காது, ரசிகர்களின் மனம் கவராது என்பதால் சேயோன் படக்குழுவினர் கடும் அதிருப்தியில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.





