- Advertisement -
Homeபொழுதுபோக்குதளபதி படம் வெளியாவதில் தொடர்ந்து நீடிக்கும் சிக்கல், இன்னும் மௌனம் காக்கும் நடிகர் விஜய் -...

தளபதி படம் வெளியாவதில் தொடர்ந்து நீடிக்கும் சிக்கல், இன்னும் மௌனம் காக்கும் நடிகர் விஜய் – மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே வந்த ஜனநாயகன்!

- Advertisement -

ஜனநாயகன் ரிலீஸ் குறித்து அறிவிப்பு இன்று வெளியாகி விடும். இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடக்கும் மேல்முறையீடு குறித்த வழக்கில் நீதிபதிகள் நல்ல ஒரு தீர்ப்பை வழங்கி விடுவார்கள் என்று எதிர்பார்த்த விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியும் ஏமாற்றமுமே கிடைத்திருக்கிறது. ஏனெனில் ஜனநாயகன் படம் ரிலீஸ் என்பது மீண்டும் தள்ளி போயுள்ளது.

இன்று ஜனநாயகன் வழக்கை விசாரித்த நீதிபதிகள் அமர்வு, இந்த வழக்கை மீண்டும் தனி நீதிபதி பிடி ஆஷா விசாரணை நடத்த வேண்டும். படத்தில் மதம் சார்ந்த பிரச்னைகளை ஏற்படுத்தும் காட்சிகள் வசனங்கள் இருப்பதாக புகார் உள்ளது. அந்த புகாரை தணிக்கை வாரிய அதிகாரியே கூறியிருக்கிறார். அப்படி மத அடையாளங்களை அவதூறு செய்வதை ஏற்க முடியாது.

- Advertisement -

எனவே மீண்டும் ஜனநாயகன் படம் குறித்த விசாரணையை தனிநீதிபதி அளித்து சென்சார் போர்டுக்கு இந்த படம் குறித்த சான்றிதழ் வழங்க போதிய அவகாசம் வழங்க வேண்டும். அவரே இறுதி தீர்ப்பை வழங்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் கூறிவிட்டனர். அதுவரை இந்த படம் திரைக்கு வர வாய்ப்பில்லை என்பதும் இதன்மூலம் தெளிவாகி விட்டது.

இப்படி ஒரு சூழலால் இனி மீண்டும் ஆரம்பித்த இடத்துக்கே ஜனநாயகன் படத்தின் நிறுவனம் வர வேண்டும். மீண்டும் இந்த வழக்கை தனி நீதிபதி பிடி ஆஷா விசாரணைக்கு எடுத்துக்கொண்டு இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிய வேண்டும். பிறகு தணிக்கை வாரியம் கேட்டுக்கொள்கிற படி படத்தை பார்த்து ஆய்வு செய்து தணிக்கை சான்று தர அவகாசம் தர வேண்டும். அதன்பிறகு அவர்கள் படம் குறித்த சான்றிதழ் தந்த பிறகுதான் ஜனநாயகன் படத்தை படத்தின் தயாரிப்பு நிறுவனம் ரிலீஸ் செய்ய முடியும்.

- Advertisement -

இந்த நடவடிக்கைகள் காரணமாக ஜனநாயகன் படம் ரிலீஸ் இப்போதைக்கு இல்லை என்பது முடிவாகி விட்டது. 6 மாதங்கள் வரை கூட ஒரு படத்துக்கு சான்றிதழ் தர தணிக்கை வாரியம் கால அவகாசம் எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளதாக ஒரு தகவல் உள்ளது. அப்படிப் பார்த்தால் தணிக்கை வாரியம் சான்றிதழ் தரும் வரை படத்தின் தயாரிப்பு நிறுவனம் அமைதி காப்பதை தவிர வேறு வழியில்லை.

அந்த அடிப்படையில் ரூ. 500 கோடி பட்ஜெட்டில் விஜய் படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனம்தான் இப்போது கதிகலங்கிப் போய் நிற்கிறது. அதே நேரத்தில் நடிகர் விஜய் தவெக மேடையில் விசில் அடித்துக் கொண்டு சந்தோஷமாக காணப்படுகிறார். ஜனநாயகன் படம் ரிலீஸ் தடைபட்டது குறித்த எந்த கவலையும் அவரிடம் இல்லை. ஜனநாயகன் படம் குறித்து இதுவரை அவர் பேசாமல் மௌனம் காப்பதும் அவரது ரசிகர்களுக்கு அதிருப்தியை தந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்