- Advertisement -
Homeபொழுதுபோக்குமிக மோசமான மனநிலையில் இருக்கிறார், அருகில் நண்பர்கள் குடும்பத்தினர் இருப்பது மிக முக்கியம் - நடிகர்...

மிக மோசமான மனநிலையில் இருக்கிறார், அருகில் நண்பர்கள் குடும்பத்தினர் இருப்பது மிக முக்கியம் – நடிகர் ரவிமோகன் குறித்து பேசிய பிரபல தயாரிப்பாளர்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் நடிகர் ஜெயம் ரவி. இப்போது ரவி மோகன் என்று தன் பெயரை மாற்றியுள்ளார். அவரது குடும்ப வாழ்க்கை பிரச்சனைகள், சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் ரவி மோகன் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கியபடி பேசியது ரசிகர்களை மட்டுமின்றி பொதுமக்களையும் பாதித்துள்ளது.

எப்போதும் உற்சாகமாகவும் கலகலப்பாகவும் காணப்பட்ட இளம் நடிகர் ரவிமோகன் மனவேதனையுடன் இப்படி உடைந்து பேசியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது. இந்நிலையில் திரைப்பட தயாரிப்பாளர் பாலாஜி பிரபு கூறியதாவது, தம்பி ரவி மோகன் முழுமையாக உடைந்து போய் பேசி இருக்கிறார். அவரைப் பார்க்கவே பாவமாக இருந்தது. எப்படி வாழ்ந்தவர் அவர், என்ன மாதிரியான இமேஜ் கொண்டவர் அவர்.

இன்று இப்படி எல்லாவற்றையும் உடைத்து வெளியில் வந்து பேச வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார் என்பதை பார்த்தாலே அவர் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்பது தெளிவாக புரிகிறது. ஒரு நடிகருக்கு சமூகத்தில் ஒரு தனி இமேஜ் இருக்கும். குறிப்பாக குடும்ப ரசிகர்கள் கொண்டாடும் ஹீரோவாக இருந்த ஒருவர் உலகமே பார்க்கும் வகையில் தன்னுடைய மனவேதனையை இப்படி வெளிப்படுத்துவது சாதாரண விஷயம் இல்லை.

அவர் இப்படி பேசியிருக்கிறார் என்றால் அவருக்குள் இருக்கும் வேதனை உண்மையாகவே மிகப்பெரியதாக தான் இருக்க வேண்டும். பொதுவாக ஒரு மனிதன் இவ்வளவு மூர்க்கமாக கோபத்தையும் வேதனையையும் வெளிப்படுத்துவது எப்போது தெரியுமா? தனக்கென்று எதுவுமே இல்லை, எல்லாமே கைவிட்டு விட்டது. தன்னம்பிக்கை கூட உடைந்து போய்விட்டது என்று உணரும் போதுதான் இந்த விளிம்பு நிலைக்கு ரவிமோகன் சென்றிருக்கிறார் போல தெரிகிறது.

குறிப்பாக குழந்தைகளை பார்க்க முடியாத நிலை, பணக்கஷ்டம், குடும்ப பிரச்சனை இவை அனைத்தும் சேர்ந்து அவரை உடைத்திருக்கிறது. இதை அவர் பேசியதை கவனித்தால் தெரியும். சில இடங்களில் தைரியமாக பேசுகிறார். அடுத்த நொடி உடைந்து அழுகிறார். பிறகு மீண்டும் பேசுகிறார். இது நார்மலான மனநிலை இல்லை. அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறார். ரொம்பவும் டென்ஷனில் இருக்கிறார். என்னை அழிக்க நினைக்கிறார்கள். நான் அவர்களை அழிக்காமல் விடமாட்டேன் என்கிறார்.

ஆனால் அந்த அளவுக்கு அவர் பேசுகிறார் என்றால் அவர் எந்த அளவுக்கு மனவேதனையில் இருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அவருக்கு இந்த நேரத்தில் ஆறுதல் தேவை. குடும்பமும் நண்பர்களும் அருகில் இருக்க வேண்டும். மோசமான இந்த மன அழுத்தத்திலிருந்து நடிகர் ரவி மோகன் வெளியே வர வேண்டும் என்று தயாரிப்பாளர் பாலாஜி பிரபு அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.

சற்று முன்