அஜித்தை தொடர்ந்து நயன்தாராவும் தான் நடிக்கும் எந்த திரைப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளுக்கும் வருவதில்லை என்ற கொள்கையோடு இருக்கிறார். ஆனால் விக்னேஷ் சிவன் தயாரிக்கும் திரைப்படங்களுக்கு மட்டும் புரொமோஷன் செய்கிறார் என்ற விமர்சனமும் அவர் மீது இருக்கிறது.
இதனிடையே அட்லீ பாலிவுட்டில் இயக்கிய “ஜவான்” திரைப்படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். இத்திரைப்படம் நயன்தாராவின் முதல் பாலிவுட் திரைப்படமாகும். ஆதலால் நிச்சயம் “ஜவான்” திரைப்படத்தின் புரொமோஷன் பணிகளில் நயன்தாரா கலந்துகொள்வார் என்று கூறப்பட்டது.
சமீபத்தில் “ஜவான்” திரைப்படத்தின் Pre release event சென்னையில் நடைபெற்றது. ஆனால் நயன்தாரா இந்த விழாவில் பங்குகொள்ளவில்லை. இதனை தொடர்ந்து நயன்தாரா இன்ஸ்டாகிராமில் தனது கணக்கை தொடங்கியுள்ளார்.
இத்தனை நாள் தனது குழந்தைகளின் முகங்களை அவர் வெளி உலகத்திற்கு காட்டியதில்லை. ஆனால் அந்த இன்ஸ்டா ஐடி தொடங்கிய உடனேயே தனது குழந்தைகளுடன் ஒரு அட்டகாசமான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார் நயன்தாரா.
நயன்தாரா இன்ஸ்டா ஐடி தொடங்கிய இரண்டு நாட்களிலேயே மில்லியன் ஃபாலோயர்கள் குவிந்துவிட்டார்கள். தற்போது இரண்டு மில்லியனுக்கும் மேல் ஃபாலோயர்களை கொண்டிருக்கிறார் நயன்தாரா.
இந்த நிலையில் நயன்தாரா இன்ஸ்டா ஐடி தொடங்கியது குறித்து பிரபல மூத்த பத்திரிக்கையாளரான அந்தணன், தனது வீடியோ ஒன்றில் ஒரு தகவல் ஒன்றை பகிர்ந்துகொண்டுள்ளார்.
அதாவது “ஜவான்” திரைப்படத்தின் Pre release event-ற்கு நயன்தாரா வராத நிலையில், “படத்தின் புரொமோஷனுக்குத்தான் வருவதில்லை. ஒரு இன்ஸ்டா ஐடி தொடங்கி அதிலாவது ஜவான் சம்பந்தப்பட்ட தகவல்களை பகிருங்கள்” என படக்குழுவினர் கேட்டுக்கொண்டார்களாம். நயன்தாராவும் மனமிறங்கி இன்ஸ்டா ஐடி தொடங்கி அதில் ஜவான் திரைப்படத்தின் டிரைலரையும் பகிர்ந்துகொண்டுள்ளார். இதுதான் நயன்தாரா இன்ஸ்டா ஐடி தொடங்கியதற்கான காரணம் என்று அந்தணன் கூறுகிறார்.





