- Advertisement -
சமீபத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் 2 படத்தின் பின்னடைவுக்கு நடிகை நயன்தாராவும் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இருவரும் காரணமில்லை. இயக்குனர் சுந்தர் சி தான் முக்கிய காரணம் என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. படப்பிடிப்பில் நடிகை நயன்தாரா நல்ல முறையில் ஒத்துழைப்பு அளித்த போதிலும் 125 கோடி ரூபாய் செலவில் உருவான இந்த படம் இதுவரை 65 கோடி ரூபாய் மட்டுமே திரும்ப பெற்றதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. படம் முழுக்க சிஜி மற்றும் விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பத்தை மட்டுமே இயக்குனர் சுந்தர் சி முழுமையாக நம்பியதால் படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.





