- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் ஏஆர் முருகதாஸ் ஹீரோ சல்மான்கான் - சிக்கந்தர் படத்தின் தோல்விக்கு காரணம் யார்? ஓபன்...

இயக்குனர் ஏஆர் முருகதாஸ் ஹீரோ சல்மான்கான் – சிக்கந்தர் படத்தின் தோல்விக்கு காரணம் யார்? ஓபன் ஸ்டேட்மென்ட் தந்த நடிகை!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கஜினி ரமணா கத்தி துப்பாக்கி சர்கார் என பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஏஆர் முருகதாஸ். அவர் தமிழில் மட்டுமின்றி இந்தி சினிமாவிலும் படங்களை டைரக்ட் செய்கிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு இயக்குனர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் இந்தி நடிகர் சல்மான்கான் நடித்த படம் சிக்கந்தர் வெளியானது.

ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் தோல்வியை சந்தித்தது.
சிக்கந்தர் படத்தை எடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி என்ற படத்தையும் ஏஆர் முருகதாஸ் இயக்கினார். அதனால் சிக்கந்தர் படப்பிடிப்பில் அவர் சரியாக கவனம் செலுத்தவில்லை என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்தது.

- Advertisement -

அதன்பிறகு ஒரு நேர்காணலில் சிக்கந்தர் படத்தின் தோல்வி குறித்து வெளிப்படையாக பேசி ஏஆர் முருகதாஸ் கூறுகையில், படத்தின் நாயகன் நடிகர் சல்மான்கானின் படப்பிடிப்பு வசதிக்காக நேரங்கள் மாற்றப்பட்டதும் அவரது விருப்பப்படி கதையில் செய்யப்பட்ட மாற்றங்களும் தான் இந்த படத்தின் தோல்விக்கு காரணம் என்று அவர் தரப்பு நியாயத்தை கூறியிருந்தார்.

இந்த சூழ்நிலையில் அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த நடிகை ராஷ்மிகா மந்தனா சிக்கந்தர் படத்தின் தோல்வி குறித்து தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ராஷ்மிகா மந்தனா கூறியதாவது, சிக்கந்தர் படத்திற்காக இயக்குனர் ஏஆர் முருகதாஸ் என்னிடம் சொன்ன கதை வேறு. படப்பிடிப்பில் படமாக்கப்பட்ட கதை அதிலிருந்து கொஞ்சம் மாறுபட்டிருந்தது.

- Advertisement -

முதலில் ஏ.ஆர். முருகதாஸ் சொன்ன கதை ரொம்பவே வித்தியாசமாக என்னை ஈர்ப்பதாக இருந்தது. ஆனால் எதனால் கதையில் இந்த மாற்றம் நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. சில நேரங்களில் நடிப்புத் திறமை படத்தொகுப்பு படமாக்கப்படும் காலம் இவற்றையெல்லாம் பொறுத்துக் கூட சில படங்களுக்கு மாற்றம் நிகழும்.

சிக்கந்தர் படத்திலும் அதுதான் நிகழ்ந்தது என்று நினைக்கிறேன் என்று ராஷ்மிகா மந்தனார் அந்த நேர்காணலில் ஓபனாக கூறியிருக்கிறார். அவரது சொல்கிறபடி பார்த்தால் இயக்குனர் ஏஆர் முருகதாஸ் முதலில் உருவாக்கியிருந்த கதையை படமாக்கி இருந்தால் சிக்கந்தர் படம் வெற்றி பெற்றிருக்கும் என்பது உறுதியாக தெரிகிறது. சல்மான்கான் தலையீட்டால்தான் கதை வேறு பாதையில் போய் தோல்வியை தழுவியிருக்கிறது.

- Advertisement -

சற்று முன்