- Advertisement -
கடந்த வாரம் சனி ஞாயிறு தினங்களில் விஜய் டிவியில் நடந்த தமிழ் பிக்பாஸ் சீசன் 10ல் நடிகர் விஜய் சேதுபதிக்கு பதிலாக நடிகை ரம்யா கிருஷ்ணன் பங்கேற்று பேசினார். அப்போது உங்களுடன் கத்தி கத்தி விஜய் சேதுபதிக்கு தொண்டையே புண்ணாகி விட்டது. டாக்டர் ஒரு வாரம் பேசாமல் ஓய்வில் இருக்க சொல்லியிருக்கிறார். அதனால் நான் வந்திருக்கிறேன் என்று கூறினார். ஆனால் உண்மையில் பாக்கெட் நாவல் படத்தின் டப்பிங்கில் விஜய் சேதுபதி சமீபத்தில் பங்கேற்று பேசியிருக்கிறார். படத்தில் கத்தி கத்தி ஹைபிட்ச்சில் பேசும் வசனங்கள் அதிகமாக இருந்ததால் தான் விஜய் சேதுபதி தொண்டை புண்ணாகி விட்டதாக தெரிய வந்துள்ளது. மேலும் இந்த வாரமும் சனி ஞாயிறு தினங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்த நடிகை ரம்யா கிருஷ்ணணே மீண்டும் வர வாய்ப்புள்ளது.





