- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் அரசியலுக்கு வராததற்கு காரணம், சின்ன வயசுல நடந்த அந்த விஷயம்தான் - தனது பிறந்தநாளில்...

நான் அரசியலுக்கு வராததற்கு காரணம், சின்ன வயசுல நடந்த அந்த விஷயம்தான் – தனது பிறந்தநாளில் மனம் திறந்த தேனிசை பாடகர் கே ஜே ஜேசுதாஸ்

- Advertisement -

தேனிசை குரலோன் பாடகர் கேஜே ஜேசுதாஸ் இப்போது அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று அவர் தனது 84வது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார். ஜேசுதாஸ் பாடல் என்றால், மனம் உருகி கரையும். அந்த வல்லமை அவரது தெய்வீக குரலுக்கு உண்டு.

மலையாளத்தை பூர்வீகமாக கொண்ட பாடகர் என்றாலும், தமிழில் பல ஆயிரக்கணக்கான பாடல்களை பாடியிருக்கிறார். சபரிமலை ஐயப்பன் பக்தர்களை மெய்சிலிர்க்க வைக்கும் அவரது பாடல் ஹரிவராசனம், விஸ்வ மோகனம்… இந்த பாடல் அவரது தெய்வீக குரலில் ஒலித்தால், அங்கு சபரிமலை வாசனே நேரில் வருவது போல பக்தர்களுக்கு தோன்றும்.

பக்தி பாடல்கள் மட்டுமின்றி கேஜே ஜேசுதாஸ் பாடும் சோக கீதங்களுக்கு தனி மகத்துவமும், தனித்துவமும் உண்டு. குறிப்பாக தமிழில் அவரது பாடல்கள் சாகா வரம் பெற்ற பாடல்களாக இன்றும் ஒலித்துக் கொண்டே தான் இருக்கின்றன. ஆராரிரோ பாடியதாரோ, தூங்கிப் போனதாரோ, பூவே பூச்சூடவா, ஊரை தெரிஞ்சுகிட்டேன், உலகம் புரிஞ்சுக்கிட்டேன் என பல பாடல்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

அதுவும் தளபதி படத்துக்காக ரஜினி, மம்முட்டி பங்கேற்ற பாடல் காட்சியான காட்டுக்குயிலு மனசுக்குள்ள, பாட்டுக்கொன்றும் பஞ்சமில்ல பாடத்தான் என்ற பாடலை கேஜே ஜேசுதாஸ், எஸ்பி பாலசுப்பிரமணியம் இருவரும் இணைந்து பாடியிருப்பர். நல்ல நட்புக்கு உதாரணமான பாட்டாக இன்று வரை அது பல இடங்களில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. கேஜேஜே – எஸ்பிபியும் கூட சிறந்த நண்பர்கள்தான்.

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே, அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்ட கேஜே ஜேசுதாஸ், இசையமைப்பாளர்கள் பாடச் சொன்னால், தொழில்நுட்ப வசதியால் அங்கிருந்தே பாடி குரலை சிடியில் பதிவு செய்து அனுப்புகிறார். இங்குள்ள இசையமைப்பாளர்கள், அந்த பாடலை இசையுடன் கோர்த்து விடுகின்றனர். அதனால், இப்போதும் 84 வயதிலும் தமிழ் சினிமாவில் கேஜே ஜேசுதாஸ் பாடிக்கொண்டுதான் இருக்கிறார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய பாடகர் கேஜே ஜேசுதாஸ், எனக்கு பல அரசியல் கட்சிகளில் இருந்து, கட்சியில் சேர அழைப்பு வந்தது. ஆனால் சிறிய வயதிலேயே என்னிடம், நீ அரசியலுக்கு போகக் கூடாது என்று என் தந்தை சத்தியம் வாங்கி விட்டார். அந்த சத்தியத்தை மீற நான் விரும்பவில்லை. சிலர் ரசிகர் மன்றம் துவங்க விரும்பியும், வேண்டாம் என்று மறுத்துவிட்டேன். இப்போது சோஷியல் மீடியாவில் கூட எனக்கு கணக்கு எதுவும் கிடையாது என்று அவர் கூறியிருக்கிறார்.

சற்று முன்