- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சூர்யாவுடன் மோத தயாரான நடிகர் சூரி - கடைசியில் பின்வாங்கியது ஏன்? அந்த விஷயங்கள்தான்...

நடிகர் சூர்யாவுடன் மோத தயாரான நடிகர் சூரி – கடைசியில் பின்வாங்கியது ஏன்? அந்த விஷயங்கள்தான் காரணமா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் சூரி காமெடி நடிகராக இருந்து கடந்த சில ஆண்டுகளில் ஹீரோவாக மாறியவர். விடுதலை படம் மூலம் அவரை கதாநாயகனாக மாற்றியவர் இயக்குனர் வெற்றிமாறன். அடுத்தடுத்து சூரி நடித்த கருடன் மாமன் போன்ற படங்கள் ஹிட் ஆனதால் இப்போது ரூ. 25 கோடி சம்பளம் கேட்கும் அளவுக்கு சூரியின் மார்க்கெட் உயர்ந்துள்ளது.

இந்நிலையில் இயக்குனர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடித்த படம் மண்டாடி. இந்த படத்தில் மஹிமா நம்பியார் சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். கடல் மீனவர்கள் குறித்த கதைக்களத்தில் உருவான இந்த படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்த படம் வருகிற ஆகஸ்ட் மாதம் வெளியீடு என அறிவிக்கப்பட்டு இருந்தது.

- Advertisement -

ஆனால் இப்போது மண்டாடி படம் செப்டம்டர் மாதம் 4ம் தேதி ரிலீஸ் என படக்குழு தரப்பில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணங்கள் குறித்து இப்போது தெரிய வந்துள்ளது. அதாவது நடிகர் சூர்யா நடித்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படம் வருகிற ஆகஸ்ட் 13ம் தேதி ரிலீஸாக உள்ளது.

இந்த படத்தை லக்கி பாஸ்கர் பட இயக்குனர் வெங்கி அட்லூரி டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படத்தையும் நடிகர் சூரி நடித்த மண்டாடி படத்தையும் நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம்தான் உரிமம் வாங்கியுள்ளது. அதனால் 2 படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் கூடாது என்று கூறியதால் மண்டாடி படம் 3 வாரங்கள் கழித்து ஆகஸ்ட் 13ம் தேதிக்கு பதிலாக செப்டம்பர் 4ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

- Advertisement -

அத்துடன் செப்டம்பர் மாதத்தில் மண்டாடி படம் ரிலீஸாகும் வாரத்தில் கிருஷ்ண ஜெயந்தி மற்றும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை விழாக்கள் வருகின்றன. அந்த நாட்களில் பண்டிகை கால கூட்டம் தியேட்டர்களுக்கு வரும் என்பதால் அதிகமாக கல்லா கட்டும் வாய்ப்பும் உள்ளது. இதை எல்லாம் விட முக்கியமான ஒரு காரணமும் உள்ளது.

முதலில் சூர்யா படம்தானே என்று அலட்சியமாக தமிழ் சினிமாவினர் நினைத்த சூழல் இப்போது மாறிவிட்டது. ஏனென்றால் கருப்பு படத்தின் அதிரிபுதிரி வெற்றியால் சூர்யாவின் இமேஜ் பழைய நிலைக்கு மாறிவிட்டது. அதனால் தியேட்டர்களில் சூரி படத்தை விட சூர்யா படத்துக்கே அதிக எண்ணிக்கையில் திரைகள் கிடைக்கும் என்பதால் சூர்யா படத்துக்கு வழிவிட்டு சூரி படம் ஒதுங்கி கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்