- Advertisement -
Homeபொழுதுபோக்குதனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து பெற்ற நாளில், கோர்ட்டில் ஆஜரான மற்றொரு நட்சத்திர ஜோடி...

தனுஷ் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து பெற்ற நாளில், கோர்ட்டில் ஆஜரான மற்றொரு நட்சத்திர ஜோடி – வழக்கை தள்ளி வைத்த நீதிபதி!

- Advertisement -

தமிழ் சினிமாவில் காதல் மணம் புரிந்த பல நடிகர்கள், நடிகைகள் திருமணமான சில ஆண்டுகள் கழித்து, ஒரு சிலர் பல ஆண்டுகள் கழித்து தங்களது திருமண முறிவை அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்கின்றனர். தொடர்ந்து விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனுதாக்கல் செய்து விவாகரத்தும் பெறுகின்றனர். இது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.

கமல்ஹாசன் தனது முதல் மனைவி வாணி கணபதியை பிரிந்தார். பிறகு 2வது மனைவி சரிகாவையும் பிரிந்தார். பிறகு தாலி கட்டாமல் லிவிங் டூ ரிலேசன்ஷிப்பில் பல ஆண்டுகள் தன்னுடன் குடும்பம் நடத்தி வாழ்ந்த நடிகை கௌதமியையும் பிரிந்தார். இப்போது முரட்டு சிங்கிளாக வலம் வருகிறார். அவரது மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்‌ஷரா ஹாசன் 35 வயதுகள் கடந்தும் முரட்டு சிங்கிள்களாக உள்ளனர்.

- Advertisement -

தமிழ் சினிமாவில் ராமராஜன் – நளினி, பார்த்திபன் – சீதா, பிரசாந்த் – கிரஹலட்சுமி, சரத்குமார் – சாயா தேவி, தனுஷ் – ஐஸ்வர்யா, ஜீவி பிரகாஷ்குமார் – சைந்தவி, ஜெயம் ரவி – ஆர்த்தி, சமீபத்தில் ஏஆர் ரகுமான் – சாயிரா பானு என திருமண முறிவுகள் குறித்த அறிவிப்புகள் ரசிகர்களை கலங்க வைக்கிறது. அதுவும் 29 ஆண்டுகளுக்கு பின் ஏஆர் ரகுமான் – சாயிரா பானு பிரிவு என்பது பெரிய அதிர்ச்சியை ரசிகர்களுக்கு தந்துள்ளது.

இதில் கடந்த 2004ம் ஆண்டில் காதல் திருமணம் செய்த தனுஷ், ஐஸ்வர்யா தம்பதிக்கு நேற்று சென்னையில் உள்ள முதன்மை குடும்ப நலநீதிமன்றம், அந்த நட்சத்திர தம்பதியின் விருப்பத்தை ஏற்று விவாகரத்து வழங்கியது. எப்படியும் தங்களது பிள்ளைகளின் நலன் கருதி அவர்கள் மீண்டும் இணைவார்கள் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இது பலத்த ஏமாற்றத்தை தந்தது.

- Advertisement -

இப்போது ஜெயம் ரவி, ஆர்த்தி விவாகரத்து வழக்கு சென்னை முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் நேற்று 2வது முறையாக விசாரணைக்கு வந்தது. நடிகர் ஜெயம் ரவி, ஆர்த்தி இருவருமே நேரில் கோர்ட்டில் ஆஜராகினர். அப்போது சமரச தீர்வு மையத்தில் ஒரு மணி நேரத்துக்கு மேல் இருவருக்கும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதையடுத்து வருகிற டிசம்பர் 7ம் தேதி ஜெயம் ரவி, ஆர்த்தி விவாகரத்து வழக்கு விசாரணையை தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தனுஷ், ஐஸ்வர்யா போல இவர்களும் தங்களது விவாகரத்தில் உறுதியாக இருக்கிறார்களா என்பது அடுத்தடுத்த விசாரணையில் தெரிய வரும். ஆனால் ஆர்த்தியை காட்டிலும், நடிகர் ஜெயம் ரவி விவாகரத்து பெறுவதில் அதிக முனைப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. அவர்தான் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்