நடிகர் ரஜினிகாந்த் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சிறிது சரிவை சந்தித்தார். அவர் நடித்த வீரா, பாபா, குசேலன், லிங்கா போன்ற படங்கள் சரியாக போகவில்லை. தொடர்ந்து கபாலி, காலா, பேட்ட போன்ற படங்கள் நன்றாக ஓடி ஹிட் படங்களாக அமைந்தன. அதன்பின் தர்பார் பிளாப் படமாக போனது. அண்ணாத்த படமும் சுமாரான படமாக தான் தந்தது.
ஆனால் ரஜினி எதிர்பார்த்தது போன்ற ஒரு கமர்ஷியல் மாஸ் ஹிட் படம்தான் ஜெயிலர். இந்த படம் 550 கோடி ரூபாய்க்கு மேல் வசூலில் சாதனை புரிந்தது. அதனால் இதுவரை தனது படத்தின் 2ம் பாகத்தில் நடிக்க ஆர்வம் காட்டாத ரஜினி, ஜெயிலர் 2 படத்தில் நடிக்க சம்மதித்து விட்டார். இதற்கான ஒரு வெயிட்டான அட்வான்ஸை, டைரக்டர் நெல்சனுக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனமும் வழங்கி விட்டது.
ஆனால் உண்மையில் சொல்லப் போனால், ஜெயிலர் படம் பழைய படத்தின் அப்பட்டமான காப்பிதான். 40 ஆண்டுகளுக்கு முன், சிவாஜிகணேசன் நடித்த தங்கப்பதக்கம் படத்தின் கதையும், ஜெயிலர் படக்கதையும் ஒன்றுதான். மகன் குற்றவாளி என தெரிந்ததும், தந்தையே சுட்டுக்கொல்லும் ஒரு சுமாரான கதைதான்.
ஆனாலும் ரஜினி என்னும் சூப்பர் ஸ்டார் வேல்யூவும், அனிரூத் என்ற இசையமைப்பாளரின் இசை அதிர்வும், இந்த படத்தை அதிகளவில் ரசிக்கும்படி செய்துவிட்டது. இந்த படத்தை ரஜினியை தவிர வேறு யார் நடித்திருந்தாலும் ஒரு வாரம் கூட ஓடியிருக்காது. இந்த படம் ஓட மற்றொரு முக்கிய காரணம், படத்தின் வில்லன் மலையாள நடிகர் விநாயகம்தான்.
இப்போது தசெ ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வரும் ரஜினி, அடுத்து லோகேஷே் கனகராஜ் இயக்கத்தில் 171வது படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு வரும் ஏப்ரலில் துவங்கும் என எதிர்பார்த்த நிலையில், ஜூன் மாதம் என தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம், லோகேஷ் கனகராஜ், ஸ்ருதிஹாசனுடன் நடிக்க போனதுதான் காரணமா, என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏனெனில், ரஜினியை பொருத்தவரை சொன்ன விஷயம், சொன்ன தேதியில் நடந்தாக வேண்டும். ஜவ்வு இழுப்பு போன்ற தாமதங்கள் அவருக்கு பிடிக்கவே பிடிக்காது. ஆனால் ஏப்ரல் என முதலில் சொல்லிவிட்டு ஜூன் மாதம் ரஜினி 171 படப்பிடிப்பை தள்ளிப் போட காரணம், ஸம்மர் சீசனாகவும் இருக்கலாம். எனினும் இண்டோர் காட்சிகள் எடுக்கலாமே, ஏன் லோகேஷ் தாமதிக்கிறார் என்று ரஜினி ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.





