- Advertisement -
Homeபொழுதுபோக்குரூல்ஸ் எல்லாம் சின்ன தயாரிப்பாளர்கள், சின்ன நடிகர்களுக்குதானா? - பெரிய தயாரிப்பு நிறுவனம், ஸ்டார் நடிகர்கள்...

ரூல்ஸ் எல்லாம் சின்ன தயாரிப்பாளர்கள், சின்ன நடிகர்களுக்குதானா? – பெரிய தயாரிப்பு நிறுவனம், ஸ்டார் நடிகர்கள் என்றால் கட்டுப்பாடுகள் காற்றில் பறக்குமா?

- Advertisement -

தமிழ் சினிமா துறையில் முன்னணி வரிசையில் இருக்கும் நட்சத்திர நடிகர்களின் படங்கள் மட்டுமே தொடர்ந்து வெளியாகின்றன. நூற்றுக்கணக்கான கோடிகளில் லாபத்தை குவிக்கின்றன. ஹீரோ, டைரக்டர், தயாரிப்பாளர் என மூன்று தரப்பும் தங்களுக்கான கணிசமான பங்கை பிரித்துக்கொள்கின்றனர். இது கடந்த பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், விஜய், அஜீத்குமார், தனுஷ், சூர்யா, கார்த்தி, விக்ரம் என குறிப்பிட்ட நடிகர்களுக்கு மட்டுமே பட வாய்ப்புகள் வருகின்றன. அவர்களை வைத்து பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் பல நூறு கோடி ரூபாய் முதலீட்டில் பெரிய பட்ஜெட் படங்களை தயாரிக்கின்றன. இசையமைப்பாளர், டைரக்டர், ஹீரோ என கூட்டணி இமேஜ், அவர்களுக்கான படத்துக்கு பெரிய வசூலை பெற்றுத் தந்து விடுகிறது.

- Advertisement -

ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக சின்ன பட்ஜெட் படங்கள் என்பதே சினிமாவில் வெகுவாக குறைந்து போய்விட்டது. நூற்றுக்கணக்கான துணை நடிகர்களுக்கு படங்களில் நடிக்க வாய்ப்பில்லை. இரண்டாம் நிலை ஹீரோக்கள், மூன்றாம் நிலை துணை நடிகர்கள் பலரும் சினிமா வாய்ப்பின்றி வருமானமின்றி தவிக்கின்றனர்.

மாதத்தில் 10 நாட்கள் வேலை இருந்தாலே பெரிய விஷயம் என்ற சூழலில், படப்பிடிப்பு இல்லாத நிலையில் சினிமாத்துறை சார்ந்த தொழிலாளர்கள் வறுமையில் வாடுகின்றனர். இதையடுத்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண கடந்த ஆகஸ்ட் 15 முதல் புதிய படங்கள் துவங்க படபூஜை போடக் கூடாது, நவம்பர் 1 முதல் எந்த படப்பிடிப்பு பணிகளும் நடத்தக் கூடாது என்ற விதிமுறையை கொண்டு வந்தது.

- Advertisement -

ஆனால் நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 69 படப்பிடிப்பு கடந்த 5ம் தேதி துவங்கியது. முன்னதாக 4ம் தேதி படபூஜை சிறப்பாக நடந்து, அந்த புகைப்படங்களும் வெளியாக, சமூக வலைதளங்களில் வைரலாகின. அதே போல், அமரன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் சுதா கொங்கரா படப்பிடிப்பும் வருகிற டிசம்பரில் துவங்க உள்ளது.

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், முரளி மகன் அதர்வா நடிக்கும் படப்பிடிப்பும் தொடர்ந்து நடைபெற உள்ளது. இந்த படப்பிடிப்புகளுக்கான ஏதேனும் சில காரணங்களை சொல்லி, தயாரிப்பாளர் சங்கத்தில் சிறப்பு அனுமதி பெற்று படப்பிடிப்பை, அந்த தயாரிப்பு நிறுவனங்கள் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. விஜய், சிவகார்த்திகேயன் போன்ற ஸ்டார் ஹீரோக்களை எல்லாம் தயாரிப்பாளர்கள் தடுக்க முடியாது. ரூல்ஸ் எல்லாம் சின்ன நடிகர்கள், சின்ன தயாரிப்பாளர்களுக்குதான் என்ற விமர்சனம் கோலிவுட்டில் பரவி வருகிறது.

- Advertisement -

சற்று முன்