- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த விஷயத்தில் பெயர் வாங்குன இயக்குனர் மணிரத்னம், கமல் படத்துல சொதப்பிட்டாரே? - இதுக்கு அந்த...

அந்த விஷயத்தில் பெயர் வாங்குன இயக்குனர் மணிரத்னம், கமல் படத்துல சொதப்பிட்டாரே? – இதுக்கு அந்த இரண்டு பேரும்தான் முக்கிய காரணமாம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல முக்கிய வெற்றிப் படங்களை தந்தவர் இயக்குனர் மணிரத்னம். தளபதி, நாயகன், அக்னி நட்சத்திரம், ரோஜா, பாம்பாய், உயிரே, அலைபாயுதே, ஆயுத எழுத்து என அவரது படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் தனி கவனம் பெற்றவை, கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை, சமீபத்தில் 2 பாகங்களாக திரைப்படங்களாக இயக்கியிருந்தார் மணிரத்னம்.

இந்திய அளவில் மிகவும் புகழப்படும் ஒரு இயக்குனர்தான் மணிரத்னம். அவர் இயக்கிய பல படங்களுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. நடிகர் சாருஹாசனின் மகள் நடிகை சுகாசினியின் கணவர்தான் மணிரத்னம். கமல்ஹாசன், மணிரத்னத்துக்கு சின்ன மாமனார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் 1986ம் ஆண்டில் மணிரத்னம், கமல் நாயகன் படத்தில் இணைந்த பிறகு மீண்டும் 38 ஆண்டுகளாக மீண்டும் இணையவில்லை.

- Advertisement -

இதற்கும் நாயகன் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்த படத்தில் வேலு நாயக்கர் கேரக்டரில் நடித்த கமலுக்கு, சிறந்த நடிகர் தேசிய விருது கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனால் நெருங்கிய உறவினராக இருந்தும் கமல், மணிரத்னம் படத்தில் நடிக்கவில்லை. 38 ஆண்டுகளுக்கு பின் தக்லைப் படம் மூலம் அது நிறைவேறி இருக்கிறது.

பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா, அபிராமி உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இந்தியாவில் டெல்லி, ராஜஸ்தான், ஐதராபாத் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்ட நிலையில், இன்னும் இரண்டு மாதங்களுக்கு மேல் ஷூட்டிங் நடத்தப்பட உள்ளது.

- Advertisement -

வழக்கமாக மணிரத்னம் இயக்கும் படங்கள், 50 முதல் 60 நாட்களில் முடிக்கப்பட்டு விடும். அந்த விஷயத்தில் கில்லாடியாக மணிரத்னம், நேரத்தையும் பொருட்செலவையும் கட்டுப்படுத்தி விடுவார். சரியான திட்டமிடலில், காட்சிகளை படமாக்கி அதிக நாட்கள் எடுத்துக்கொள்ளாமல் படத்தை இயக்கி முடிப்பதில் அவர் வல்லவர் என பெயர் வாங்கியவர்.

ஆனால் 3 மாதங்கள் கடந்தும் இன்னும் இரண்டு மாதங்களுக்கு மேல் தக்லைப் படப்பிடிப்பை இயக்குனர் மணிரத்னம் நடத்துவது, தமிழ் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காரணம், இந்த படத்தில் துவக்கத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் நடிப்பதாக இருந்து அவர்களுக்காக திரைக்கதை எழுதப்பட்டது. அவர்கள் விலகிவிட்ட நிலையில், அரவிந்த் சாமி, சித்தார்த் போன்றவர்கள் அந்த கேரக்டர்களில் நடிக்க முன்வரவில்லை. அதனால் கமல், சிம்பு ஆகியோரை மட்டுமே மையப்படுத்தி திரைக்கதையை மீண்டும் மாற்றி மணிரத்னம் எழுதியதுதான், படப்பிடிப்பு நீண்டுக்கொண்டே போக காரணம் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்