- Advertisement -
Homeபொழுதுபோக்குசிபி சக்ரவர்த்திக்கு அந்த சிக்கல் ஒருவழியாக தீர்ந்தது, ஆனா ரஜினி தரப்பில் இன்னும் பிரச்னை ஓயலையே?...

சிபி சக்ரவர்த்திக்கு அந்த சிக்கல் ஒருவழியாக தீர்ந்தது, ஆனா ரஜினி தரப்பில் இன்னும் பிரச்னை ஓயலையே? – தலைவர் 173 படத்தில் நீடிக்கும் இழுபறி!

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தில் நடித்து முடித்துவிட்டார். நேற்று முன்தினம்தான் படப்பிடிப்பை நிறைவு செய்து கேக் வெட்டி கொண்டாடினார்கள். இப்போது அடுத்ததாக தலைவர் 173 படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார். இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

முதலில் இந்த படத்தை இயக்க கமிட் ஆனவர் டைரக்டர் சுந்தர் சி தான். ஆனால் அவர் திடீரென விலகிய நிலையில் பிறகு டான் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இந்த படத்தை இயக்குவார் என வீடியோ வெளியிட்டு ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்தது. மேலும் சாய் அபயங்கள் இசையில் வருகிற 2027 பொங்கலுக்கு இந்த படம் ரிலீஸ் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் இந்த படத்தின் கதை திரைக்கதையில் திருத்தங்களும் மாற்றங்களும் ரஜினிகாந்த் செய்ய சொன்னதாகவும் குறிப்பாக துரந்தர் படம் போல இதில் தேசிபக்தி சார்ந்த விஷயங்களை கொண்டு வரவேண்டும் என்றும் ரஜினிகாந்த் விரும்பியதாகவும் தெரிய வந்தது. ஆனால் சிபி சக்ரவர்த்தி அப்படி செய்தால் கதையின் போக்கை மாறிவிடும். நான் எழுதிய கதையாக இருக்காது என்றும் மறுத்திருக்கிறார்.

இதனால் சிபி சக்ரவர்த்திக்கும் ரஜினிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் அஸ்வத் மாரிமுத்துவிடம் ரஜினி பேசியதாகவும், தலைவர் 173 படத்தை அஸ்வத் தான் இயக்கப் போகிறார் என்றும் தகவல் வெளியானது. ஆனால் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இன்னும் சிபி சக்ரவர்த்தியை தலைவர் 173 படத்தில் இருந்து விலக்கவில்லை. அவர் இன்னும் அந்த நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் தான் தலைவர் 173 படத்துக்கான ஸ்கிரிப்ட் பணிகளை செய்து வருகிறார்.

- Advertisement -

இதற்கிடையே இயக்குனர் சிபி சக்ரவர்த்தி தெலுங்கு நடிகர் நானி நடிக்கும் ஒரு படத்தை இயக்க சில ஆண்டுகளுக்கு முன்பு கமிட் ஆகி ப்ரீ புரடக்சன்ஸ் பணிகளும் நடந்தது. இதற்கான அவர் ஒரு பெரும்தொகை அட்வான்ஸ்சும் வாங்கியிருந்தார். அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம், ரஜினி படத்தை இயக்கும் முன்பு நானி படத்தை இயக்கவும், அல்லது வாங்கிய அட்வான்ஸ் தொகையை வட்டியுடன் திருப்பித் தரவும் நிர்பந்தம் செய்தது.

இதனால் ரஜினி படத்தை இயக்க அந்த தெலுங்கு பட நிறுவனத்திடம் இருந்து சிபிக்கு என்ஓசி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. ஆனால் பெப்சி அமைப்பின் தலைவர் இயக்குனர் ஆர்கே செல்வமணி இந்த விவகாரத்தில் தலையிட்டு, ரஜினி படத்தை இயக்கி விட்டு பிறகு நானி படத்தை இயக்குவார். நீங்கள் அதுவரை இடையூறு செய்யக் கூடாது என தெலுங்கு பட நிறுவனத்திடம் பேசி பிரச்னையை முடித்துள்ளார். அதே வேளையில், சிபியின் இயக்கத்துக்கு ரஜினி ஓகே சொல்வாரா, அல்லது அஸ்வத் மாரிமுத்து தான் வேண்டும் என்பாரா என்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

- Advertisement -

சற்று முன்