- Advertisement -
Homeபொழுதுபோக்குபணம் வாங்கிட்டு பொய் பேசுறாரு- அஜித்தை கண்டபடி விளாசும் பிரபல தயாரிப்பாளர்

பணம் வாங்கிட்டு பொய் பேசுறாரு- அஜித்தை கண்டபடி விளாசும் பிரபல தயாரிப்பாளர்

- Advertisement -

தமிழ்நாட்டில் பல கோடி ரசிகர்களை தனது கைக்குள் போட்டு வைத்திருப்பவர் அஜித்குமார். தனது கடினமான உழைப்பால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து நிற்கும் அஜித்குமார், பல கோடி ரசிகர்களின் நம்பிக்கை நாயகனாகவும் திகழ்ந்து வருகிறார். அஜித்குமாரை குறித்து இதுவரை யாரும் நெகட்டிவாக கூறியதே கிடையாது. எனினும் பிரபல தயாரிப்பாளரான மாணிக்கம் நாராயணன் அஜித் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

“கூலி”, “மாண்புமிகு மாணவன்”, “சீனு”, “வேட்டையாடு விளையாடு”, “இந்திரலோகத்தில் நா.அழகப்பன்” போன்ற பல திரைப்படங்களை தயாரித்தவர் மாணிக்கம் நாராயணன். இவர் கடைசியாக 2011 ஆம் ஆண்டு பார்த்திபனை வைத்து “வித்தகன்” என்ற திரைப்படத்தை தயாரித்திருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மாணிக்கம் நாராயணன், அஜித் தன்னை ஏமாற்றியதாக கூறியிருக்கிறார். அதாவது 1995 ஆம் ஆண்டு அஜித், மாணிக்கம் நாராயணனிடம் தன்னுடைய பெற்றோரை வெளிநாட்டிற்கு அழைத்துச்செல்ல வேண்டும் என்று கூறி குறிப்பிட்ட சில லட்ச ரூபாய்களை வாங்கியிருந்தாராம். இந்த பணத்திற்கு பதிலாக பின்னாளில் பெரிய நடிகராக வளர்ந்த பிறகு கால்ஷீட் தருவதாக கூறினாராம்.

அதன் பின் “அவள் வருவாளா” திரைப்படத்திற்காக வெடிமுத்து என்பவரிடம் 15 லட்ச ரூபாய் கொடுத்தாராம். அதற்கு அஜித்குமார், “வெடிமுத்துவை சப்போர்ட் செய்ய வேண்டாம். அவர் ஒரு பிராடு. நீங்கள் கொடுத்த பணத்தை வேறு படத்தில் அட்ஜெஸ்ட் செய்து தருகிறேன்” என கூறினாராம். ஆனால் அதன் பின் அவர் கால்ஷீட் தரவில்லையாம். மேலும் இதற்கான ஆதாரமாக தன்னிடம் செக் புக் இருப்பதாகவும் மாணிக்கம் நாராயணன் அப்பேட்டியில் கூறியிருக்கிறார்.

- Advertisement -
- Advertisement -

சற்று முன்