- Advertisement -
Homeபொழுதுபோக்குமறுபடியும் பஞ்சாயத்து கிளப்பிய சூர்யா குடும்பம், இப்போ இப்படி ஒரு பிரச்னை புதுசா வந்திருக்கு -...

மறுபடியும் பஞ்சாயத்து கிளப்பிய சூர்யா குடும்பம், இப்போ இப்படி ஒரு பிரச்னை புதுசா வந்திருக்கு – செல்பி எடுக்க யாராச்சும் வந்துட்டாங்களா?

- Advertisement -

அடிக்கடி சர்ச்சைகளில், விமர்சனங்களில் சிக்கும் குடும்பம் எதுவென்றால் அது சூர்யா குடும்பம்தான். முதன்முறையாக முஸ்லிம் பெண் ஜோதிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் சிவக்குமாரின் மகன் சூர்யா என்று துவங்கிய விமர்சனம் இன்று வரை ஓயாமல் பல விஷயங்களில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

அதன்பிறகு ஒரு காலகட்டத்தில் செல்பி எடுக்க வந்த ரசிகர் ஒருவரின் செல்போனை தட்டி விட்டார் சிவக்குமார். இது மிகப்பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. ஒரு பிரபல நடிகருடன் ரசிகர்கள் புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டுவது இயல்புதான். அதற்கான செல்போனை தட்டிவிடும் சிவக்குமாரின் செயல் மிக அநாகரிகமானது என பலரும் அவரை கடுமையாக விமர்சித்தனர்.

இதைத்தொடர்ந்து அகரம் பவுண்டேசன் சார்பில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கல் போன்ற நிகழ்ச்சிகளில் ஏதேனும் சில சர்ச்சையான கருத்துகளை சொல்லி சூர்யாவும், ஜோதிகாவும் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்தி விடுவர். அதுவும் சமூக வலைதளங்களில் வைரலாகி விடும். குறிப்பாக மத்திய அரசுக்கு எதிரான கருத்துகளை அவர்கள் வைப்பதுதான் இதில் முக்கிய பிரச்னையாக மாறும்.

சமீபத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா, இயக்குநர் அமீரை தரக்குறைவாக விமர்சித்த வகையிலும் பலரும் அதிகமாக கண்டித்தது சிவக்குமார், சூர்யா, கார்த்தியை தான். அமீர் குறித்து ஞானவேல் ராஜாவை தவறாக பேசவிட்டு இவர்கள் மூவரும் பின்னால் இருந்து வேடிக்கை பார்க்கின்றனர் என்றே பலரும் கூறினர். கரு பழனியப்பன், நேரடியாக சிவக்குமாரை கேள்வி கேட்ட பின்பே, சிவக்குமார் உத்தரவுபடி ஞானவேல் ராஜா வருத்தம் மட்டும் தெரிவித்து பிரச்னையில் இருந்து விலகி கொண்டார்.

இப்போது சூர்யா குடும்பத்தில் மற்றொரு முக்கிய பிரச்னை முளைத்திருக்கிறது. சூர்யா, ஜோதிகா, கார்த்தி என மூன்று பேருக்குமே மேனேஜராக இருந்தவர் தங்கதுரை. பல ஆண்டுகளாக இவர்களது கால்ஷீட், சம்பள விவகாரங்களை இவர்தான் கவனித்துக்கொள்கிறார். சம்பள பாக்கி என்றால், சம்பந்தப்பட்ட கம்பெனிக்கு சென்று மணிக்கணக்கில் அமர்ந்து பேசி, கறாராக பணத்தை வசூலித்து விடுவாராம் இவர்.

அப்படிப்பட்ட அவரை, சூர்யா குடும்பத்தில் ஒருவராக அறியப்பட்ட அவரை திடீரென சூர்யா, கார்த்தி , ஜோதிகா என மூன்று பேருமே நீங்கள் இங்கே இனி பணிசெய்ய வேண்டாம், கிளம்புங்கள் என கூறிவிட்டார்களாம். இதற்கான காரணம் என்னவென்று இதுவரை தெரியவில்லை. குடும்பத்துக்கு மிக விசுவாசமாக இருந்த ஒருவரை எதற்காக திடீரென வெளியேற்றினர் என்று, கோலிவுட் வட்டாரத்தில் இந்த விஷயம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

சற்று முன்