- Advertisement -
Homeபொழுதுபோக்குஏகே 64 படத்தை தயாரிப்பது மும்பை நிறுவனம் அல்ல… இந்த நிறுவனம்தான் - கடைசியாக வெளியான...

ஏகே 64 படத்தை தயாரிப்பது மும்பை நிறுவனம் அல்ல… இந்த நிறுவனம்தான் – கடைசியாக வெளியான லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்!

- Advertisement -

கடந்த ஆண்டில் அஜீத்குமார் நடித்த குட் பேட் அக்லி படம் வெளியானது. அதன்பிறகு இதுவரை அஜீத்குமாரின் அடுத்த படம் ஷூட்டிங் துவங்கப்படவில்லை. எப்போது ஷூட்டிங் என்பதும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஏனெனில் தயாரிப்பாளர் யார் என்பதே முடிவாகாமல் இழுத்துக்கொண்டே போனது.

ஏகே 64 படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் நாயகி ஸ்ரீலீலா இசையமைப்பாளர் அனிருத் என முடிவான நிலையில் தயாரிப்பு நிறுவனங்கள் எதுவுமே இந்த படத்தை தயாரிக்க ஆர்வம் காட்டவில்லை. ஏனெனில் அஜீத்குமாருக்கு போட்டியாளராக இருந்த விஜய் அரசியலுக்கு போய்விட்டதால் களத்தில் அஜீத்குமாருக்கு போட்டியாக யாரும் இல்லை.

- Advertisement -

மேலும் தனது 64வது படத்தில் நடிக்க நடிகர் அஜீத்குமார் சம்பளம் ரூ. 186 கோடி என்று கேட்டதால் கடந்த ஓராண்டுக்கு மேலாக அவரது அடுத்த படத்தை தயாரிக்க எந்த தயாரிப்பு நிறுவனமும் தயாராக வரவில்லை. எந்த தயாரிப்பாளரும் முன்வரவில்லை. அதனால் ஏகே 64 படம் ஷூட்டிங் முடிவாகாமல் கால தாமதம் ஓராண்டுக்கு மேல் நீடித்தது.

இந்நிலையில் மும்பையை சேர்ந்த பென் மீடியா நிறுவனம் ஏகே 64 படத்தை தயாரிக்க முன்வந்ததாக ஒரு தகவல் வெளியானது. இந்த நிறுவனம் மிகப்பெரிய நிதி நிறுவனம். ஷங்கர் இயக்கத்தில் உருவாக உள்ள வேள்பாரி படத்தை பென் மீடியா நிறுவனம்தான் தயாரிக்க போவதாக சமீபத்தில் தகவல் வெளியாகி உள்ளது. வேள்பாரி படத்தின் பட்ஜெட் ரூ. 1000 கோடி இருக்கும் என்கின்றனர்.

- Advertisement -

இந்த சூழலில் நடிகர் அஜீத்குமார் படத்தை தயாரித்த சம்மதம் தெரிவித்த பென் மீடியா அஜீத்குமாரின் சம்பளத்தை ரூ. 100 கோடியாக குறைத்து விட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் இப்போது மும்பையை சேர்ந்த பென் மீடியா நிறுவனம் ஏகே 64 படத்தை தயாரிக்கவில்லை என்பது உறுதியாகி உள்ளது. வேறு ஒரு நிறுவனம் தயாரிப்பதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

ஆந்திராவைச் சேர்ந்த ஏகே எண்டர்டெயின்மென்ட் என்று தெலுங்கு தயாரிப்பு நிறுவனம் ஒன்றுதான் ஏகே 64 படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளர் அனில் சுங்கராவின் தயாரிப்பில் இந்த படம் உருவாக உள்ளது. இவர் ஏற்கனவே தெலுங்கில் நடிகர் சிரஞ்சீவி நடித்த போலா சங்கர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தவர் என்றும் கூறப்படுகிறது. இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்குகிறது.

- Advertisement -

சற்று முன்