- Advertisement -
Homeபொழுதுபோக்குதலைவர் தம்பி தலைமையில்… படத்துக்கு பின்னால் இப்படி தரமான சம்பவமும் நடந்திருக்கிறதா? - இனியாவது இயக்குனர்கள்...

தலைவர் தம்பி தலைமையில்… படத்துக்கு பின்னால் இப்படி தரமான சம்பவமும் நடந்திருக்கிறதா? – இனியாவது இயக்குனர்கள் மாறுவார்களா?

- Advertisement -

நடிகர் ஜீவா நடிப்பில் பொங்கலுக்கு வெளியான படம் தலைவர் தம்பி தலைமையில். இந்த படம் சுருக்கமாக டிடிடி என்று அழைக்கப்படுகிறது. மலையாள இயக்குனர் நிதிஷ் சஹதேவ் இந்த படத்தை இயக்கி உள்ளார். இதுதான் தமிழில் அவர் அறிமுகமாகிய முதல் படமாகும்.

மலையாளத்தில் நடிகர் பசில் ஜோசப் நாயகனாக நடித்த ஃபெலிமி என்ற படத்தை இயக்கிய நிதிஷ் சஹதேவ் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். இந்த படத்தில் திருமண வயது கடந்தும் திருமணம் ஆகாத நிலையில் விரக்தியான நிலையில் நாயகன் இருக்கிறார். இதற்கிடையே ஒரு பெண் பார்த்து திருமணம் நிச்சயிக்கும் வேளையில் நின்று போய்விடுகிறது.

- Advertisement -

தடைபட்ட திருமணத்தால், நீண்ட நாட்களாக காசிக்கும் போகும் ஆசையில் இருக்கும் தாத்தாவை அழைத்துக்கொண்டு குடும்பமே காசிக்கு செல்கிறது. அங்கு ரயிலை தவறவிடும் நிலையில் படாதபாடு பட்டு அந்த குடும்பம் காசிக்கு போகிறது. ஆனால் அங்கு திடீரென தாத்தா காணாமல் போய்விடுகிறார். அவர் இறந்துவிட்டதாக குடும்பமே சடங்கு செய்கிறது.

ஆனால் அந்த தாத்தா காசியில் அவர்களை எல்லாம் விட்டுவிட்டு தனது நண்பன் இறந்த சோகத்தில் வீட்டுக்கே திரும்பி வந்துவிட்டதாக ஊரில் இருந்து போனில் தகவல் வருகிறது. இப்படி ஒரு சுவாரசியமான கதைக்களத்தில் படம் எடுத்த இயக்குனர் நிதிஷ் சஹாதேவ் இயக்கிய தமிழ் படம்தான் டிடிடி. இந்த படமும் மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை தமிழில் பெற்றுவிட்டது.

- Advertisement -

நடிகர் ஜீவாவுக்கு கோ படத்தின் வெற்றிக்கு பிறகு மிகப்பெரிய கம்பேக் கொடுத்த படமாகவும் இது அமைந்து விட்டது. முதலில் இந்த படத்தை எந்த ஓடிடி நிறுவனமும் டிஜிட்டல் உரிமம் பெற முன்வராத நிலையில் தியேட்டரிக்கல் வருமானத்தை மட்டுமே நம்பி இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால் இந்த படம் ரூ. 40 கோடிக்கு மேல் வசூலை அள்ளிவிட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில் நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் தானாக முன்வந்து விலை பேசி டிடிடி படத்தை ரூ. 8 கோடிக்கு வாங்கியுள்ளது. இந்த படத்தின் மொத்த பட்ஜெட்டே சில கோடிகள் என்றுதான் சொல்லப்படுகிறது. அதனால் இனி இயக்குனர்கள் நான் தியேட்டரிக்கல் லாபத்தை நம்பாமல், தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களின் வருமானத்தை நம்பி, அவர்கள் விரும்பும் கண்டென்டுகளை திரையில் கொண்டு வந்தால் அந்த படமும் ஜெயிக்கும். ஓடிடி நிறுவனங்கள் தியேட்டரில் ஜெயித்த படங்களை போட்டி போட்டுக்கொண்டு அதிக விலை கொடுத்து வாங்கவும் முன்வரும் என்பதை டிடிடி படம் நிரூபித்து காட்டியுள்ளது.

- Advertisement -

சற்று முன்