நடிகை நயன்தாரா, கடந்த 2005ம் ஆண்டில் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். ஐயா படத்தின் மூலம் அவரை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் ஹரி. சரத்குமாருக்கு ஜோடியாக அந்த படத்தில் நடித்திருந்தார். ஒருவார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன், பாடல் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது.
தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகையான நயன்தாரா ரஜினி, விஜய், அஜீத்குமார், தனுஷ், சியான் விக்ரம், விஜய் சேதுபதி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரிய அளவில் முன்னுக்கு வந்தார். ஒரு கட்டத்தில் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கும் அளவுக்கு தமிழ் சினிமாவில் டாப் ஸ்டாராக மாறினார்.
இதற்கிடையே நடிகர் சிலம்பரசன், நடிகர் பிரபுதேவா ஆகியோருடன் காதல் வசப்பட்ட அவர், சில ஆண்டுகள் சிலம்பரசன் கட்டுப்பாட்டில் இருந்தார். பிறகு பிரபுதேவா காதலியாக வலம் வந்தார். அந்த இருவரும் கழட்டி விட்ட நிலையில், நானும் ரவுடிதான் படத்தில் நடித்த போது இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் காதல் வசப்பட்டார். 7 ஆண்டுகள் காதலித்த நிலையில் கடந்தாண்டில் திருமணம் செய்துக்கொண்டார்.
திருமணமான சில மாதங்களில் வாடகைத்தாய் மூலம், இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொண்ட அவர்கள் உலகம், உயிர் என பெயரிட்டு குழந்தைகளை வளர்த்து வருகின்றனர். நயன் கேர் என்ற அழகு சாதனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை வணிகத்திலும், நயன்தாரா ஈடுபட்டு வருகிறார். வெளிநாடுகளுக்கு தங்களது சொந்த விமானத்தில் சென்று வருகின்றனர். தமிழ் சினிமாவில், பாலிவுட் நட்சத்திரங்களை போல லக்ஷரி லைப்பில் வாழ்ந்து வரும் நட்சத்திர தம்பதி இவர்கள் மட்டுமே.
இரு தினங்களுக்கு முன், நயன்தாரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனது கணவர் விக்னேஷ் சிவனை அன்பாலோ செய்திருந்தார். இதையடுத்து நயன்தாரா – விக்கி இடையே ஏதோ பிரச்னை ஏற்பட்டுள்ளது. சமீபமாக அவரது இன்ஸ்டாகிராம் பதிவுகளிலும் சில வித்யாசங்கள் தெரிந்து வருவதால், இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதற்கு பதிலளித்த நயன்தாரா, ஏதோ டெக்னிக்கல் தவறு, விக்கியை அன்பாலோ செய்யவில்லை என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன், திருமண நாளில் எடுத்த ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதில் சோபா ஒன்றில் விக்னேஷ் அமர்ந்திருக்க, அவரது மடிமேல் நயன்தாரா கட்டியணைத்தபடி அமர்ந்திருக்கிறார். அப்போது அவர்களுக்கு அருகில் உள்ள ஒருவர் புல்லாங்குழல் வாசிக்க, நயன்தாரா அதே கேட்டு ரசித்து கூச்சலிடுவதும் விக்னேஷ் கன்னத்தில் முத்தமிடுவதும், முகத்தோடு முகம் வைத்து தேய்ப்பதும் என, பார்ப்பதற்கே மிக அநாகரிகமாக இருக்கிறது. இந்த வீடியோவை போட்டு, நீங்க ஒண்ணா இருக்கறதை காட்டி நிரூபிக்கணுமா, பக்கத்துல ஒரு மனுஷன் உசுரக் கொடுத்து வாசிச்சிட்டு இருக்கறான் என நெட்டிசன்கள் கழுவி கழுவி ஊற்றுகின்றனர். அந்த வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.
அந்த மனுஷன் பாவம்யா யோவ் Viki
#Nayanthara pic.twitter.com/C4G96xxFfH— ♕ပ𑂞ఎ𑂞♡™🦋 (@SriBala111) March 5, 2024





