- Advertisement -
Homeபொழுதுபோக்குரூ. 6.5 லட்சம் கொடுத்துவிட்டு வீடியோவில் புலம்பிய பிரபல நடிகர் - லஞ்சம் கொடுக்கறதும் குற்றம்தான்...

ரூ. 6.5 லட்சம் கொடுத்துவிட்டு வீடியோவில் புலம்பிய பிரபல நடிகர் – லஞ்சம் கொடுக்கறதும் குற்றம்தான் ப்ரோ

- Advertisement -

திருவிளையாடல் படத்தில், பிரிக்க முடியாதது எதுவோ என சிவபெருமானாக வரும் சிவாஜி, தருமியான நாகேஷிடம் ஒரு கேள்வி எழுப்புவார். அதைப் போல தமிழ் சினிமாவில் பிரிக்க முடியாதது எதுவோ என்ற கேள்வியை எழுப்பினால், சில நடிகர்களையும், சர்ச்சைகளும் பிரிக்கவே முடியாது என தைரியமாக சொல்லலாம் போல இருக்கிறது.

நீண்ட இடைவெளிக்கு பிறகு, எஸ்ஜே சூர்யாவின் நடிப்பால், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய மார்க் ஆண்டனி படம், வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. 100 கோடி ரூபாய் வசூலை அடையும் நிலையில், இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்துள்ளனர். நேற்று 28ம் தேதி இந்த படம் இந்தியில் ரிலீஸ் ஆனது.

- Advertisement -

இந்நிலையில், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள மார்க் ஆண்டனி படத்தின் நாயகன் விஷால், மும்பையில் உள்ள சென்சார் போர்டு அதிகாரிகள், இந்த படத்தின் இந்தி வெர்சனுக்காக ரூ. 6.5 லட்சம் லஞ்சமாக வாங்கியதாக பரபரப்பு புகாரை கூறியுள்ளார். படத்தை திரையிடுவதற்கு ரூ. 3 லட்சமும், சென்சார் அனுமதி சான்றிதழுக்கு ரூ. 3.5 லட்சம் என, இரண்டு தவணைகளாக ரூ. 6.5 லட்சம் லஞ்சமாக தந்ததாக கூறியுள்ளார்.

இந்த நிலை எந்த தயாரிப்பாளருக்கும் வரக்கூடாது என்று வீடியோவில் கூறிய விஷால் இதுகுறித்து மகாராஷ்டிரா முதல்வர் மற்றும் பிரதமர் மோடி கவனத்துக்கும் எடுத்துச் செல்வதாகவும் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பதில் அளித்துள்ள மத்திய அரசு, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரிகளை விசாரிக்க, விரைவில் மும்பைக்கு அனுப்ப உள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில், விஷால் வெளியிட்டுள்ள வீடியோவை பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். சினிமாவில் மட்டும் லஞ்சம் என்று நினைத்தால், நிஜ வாழ்விலும் லஞ்சம் இருப்பதாக கூறியிருக்கும் விஷால், லஞ்சம் கேட்ட அதிகாரிகளை, லஞ்சம் ஒழிப்பு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் தெரிவித்து பிடித்துக் கொடுத்திருக்கலாமே என, கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதுமட்டுமின்றி, படம் எப்படியாவது இந்தியில் வர வேண்டும். இந்தியிலும் அதிக வசூலை பெற வேண்டும் என்ற லாப நோக்கத்தில், மும்பையில் அதிகாரிகளுக்க சத்தமில்லாமல் லஞ்சத்தை கொடுத்துவிட்டு வந்து, இப்போது இந்த வீடியோ வெளியிடுவதால் ஒரு பயனும் இல்லை. லஞ்சம் வாங்குவது மட்டுமல்ல, லஞ்சம் கொடுப்பதும் குற்றம்தான் என, விஷாலுக்கு தெரியாதா எனவும் கிண்டலாக கேட்டு வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்