நடிகை நயன்தாரா சமீப காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அதற்கு ஏற்றார் போல், ஆரம்ப காலத்தில் அவர் நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா, அறம், மாயா உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகி வெற்றியைப் பெற்றன. ஆனால் அதன் பிறகு அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த திரைப்படங்கள் பலவும் தோல்வியை தழுவின.
குறிப்பாக ஐரா, நெற்றிக்கண், ஓ2, கனெக்ட் ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களை பெரிதும் கவராமல் சென்றன. இதன் நடுவே, தனது நீண்ட நாள் காதலர் விக்னேஷ் சிவனை கரம் பிடித்தார் நயன்தாரா. நானும் ரவுடிதான் திரைப்படத்தின் போது இருவருக்கும் காதல் மலர, அதை வெளிப்படையாக தெரிவித்து அவர்கள் பொதுவெளியில் ஜோடியாக வலம் வந்தனர். இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கினர்.
இதன் கீழ் ராக்கி, கூழாங்கல் உள்ளிட்ட திரைப்படங்களை அவர்கள் வெளியிட்டனர். இதை எடுத்து திருமணம் செய்ய இருவரும் முடிவு எடுக்க, மாமல்லபுரத்தில் பிரம்மாண்ட முறையில் இருவருக்கும் கல்யாணம் நடைபெற்றது. இதில் திரைத்துறையைச் சேர்ந்த பலரும் பங்கேற்றனர். இவர்களுக்கு உயிர், உலக் என இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளன.
திருமணத்திற்கு பிறகு பெரிதாக நடிப்பில் கவனம் செலுத்தாமல் இருந்து வந்தார் நயன்தாரா. இந்த வருடம் அவர் நடிப்பில் ஜவான் இறைவன் ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாகின. இதற்கான சூட்டிங் கடந்த காலங்களிலேயே நடத்தப்பட்ட நிலையில், இந்த இரண்டு திரைப்படங்களும் தமிழ்நாட்டில் வரவேற்ப்பை பெற தவறியது. பிற புக்காகாமல் தனது குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு வந்தார் நயன்தாரா.
இந்த நிலையில் தற்போது அவர் அன்னபூரணி மற்றும் மண்ணாங்கட்டி ஆகிய இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் மண்ணாங்கட்டி திரைப்படத்தின் சூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது. அன்னபூரணி படத்தின் போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இதில் ஜெய் சத்யராஜ் உள்ளிட்ட ஏராளமான நடித்துள்ளனர்.
பிராமண சமூகத்தை சேர்ந்த ஒரு பெண், சமையல் கலைஞராக எப்படி மாறுகிறார் என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் வரும் ஒன்றாம் தேதி வெளியாகும் நிலையில், அதற்கான ட்ரெய்லர் தற்போது ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. அதில் தான் சென்னையில் எம்பிஏ படிப்பதாக பொய் கூறிவிட்டு சமையல் கல்வியை நயன்தாரா பயில்வதாகவும், இதற்கு எதிராக அவர் குடும்பத்தினர் செயல்படுவது போன்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ட்ரைலரை பார்க்கும்போது படம் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.




