நடிகர் சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா படம், வரும் நவம்பர் 14ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படம் வரும் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது ஒரு மாதம் தள்ளி ரிலீஸ் செய்யப்படுகிறது. அதற்கு காரணம் நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வருகிற அக்டோபர் 10ம் தேதி ரிலீசாகிறது என்பதால்தான் கங்குவா ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இப்போது நடிகர் சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், சூர்யா 44 என்ற படம் உருவாகி வருகிறது. இன்னும் இந்த படத்துக்கு டைட்டில் வைக்கப்படவில்லை. இந்த படத்தின் ஷூட்டிங்காக சென்னையில் ஜெயில் செட் போடப்பட்டு படப்பிடிப்பு அடுத்த வாரம் 25ம் தேதி துவங்க இருப்பதாக தெரியவந்துள்ளது. இந்த ஒரு ஷெட்யூலை முடித்த பிறகு படப்பிடிப்பு முடிந்து விடும் என்று கூறப்படுகிறது.
ஏற்கனவே இயக்குனர் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடிக்கும் வாய்ப்பை சூர்யா தவற விட்டார். மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க வேண்டிய புறநானூறு படத்தில் இருந்தும் விலகி விட்டார். வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்பது இப்போது வரை முடிவாகவில்லை. இப்படி சூர்யாவின் திரை பயணம் தொடர்ந்து சுணக்கமாக இருந்து வருகிறது.
இந்நிலையில் நடிகர் சூர்யா நடித்து வரும் சூர்யா 44 படத்தின் ஷூட்டிங்கில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இதுவரை சம்பளம் வழங்கப்படவில்லை என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சூர்யா ஆகியோரின் சொந்த தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்துதான் இந்த படத்தை தயாரிக்கின்றன. அதனால் இரண்டு மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால் சூர்யா 44 படப்பிடிப்பு துவங்கி 4 மாதங்களுக்கு மேல் ஆன நிலையில் இன்னும் படப்பிடிப்பில் பணி செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்பது மிகப்பெரிய அதிர்ச்சியை தமிழ் சினிமா வட்டாரத்தில் ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கார்த்திக் சுப்பராஜ், சூர்யா கவனத்துக்கு கொண்டு சென்றார்களா என்றும் தெரியவில்லை.
புரட்சிகரமான கருத்துகளை படத்தில் சொல்லும் நடிகர் சூர்யா, இயக்குனர் கார்த்திக்ராஜ் போன்றவர்கள் இப்படி தங்களது படத்தில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு பல மாதங்களாக சம்பளத்தை தராமல் நிறுத்தி வைப்பதும், தாமதிப்பதும் சரியில்லை என்று ரசிகர்கள் பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இதன் பிறகு விரைவில் அவர்களுக்கான சம்பளத்தை கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்





