- Advertisement -
Homeபொழுதுபோக்குஸ்டார் திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருப்பது இந்த நட்சத்திரமா... ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் வைத்திருக்கும் படக்குழு...

ஸ்டார் திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருப்பது இந்த நட்சத்திரமா… ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் வைத்திருக்கும் படக்குழு…

- Advertisement -

லிப்ட் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் கவினுக்கு, மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்த திரைப்படம் டாடா. தனது இரண்டாவது திரைப்படமே அவருக்கு வெற்றியை கொடுத்து, திரைத்துறையில் முன்னேற ஒரு முக்கியமான படிக்கட்டாக அமைந்தது.

 

- Advertisement -

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த திரைப்படம் வெளியான நிலையில், அடுத்ததாக அவர் இயக்குனர் இளனுடன் இணைந்தார். பியார் பிரேமா காதல் என்னும் திரைப்படத்தின் மூலம் இளன் இயக்குனராக அறிமுகம் ஆகி இருந்தார். முதல் படத்திலேயே இளைஞர்களை இளன் கவர்ந்ததால், ஸ்டார் திரைப்படத்தின் மீது ஆரம்பம் முதலில் எதிர்பார்ப்பு இருந்தது.

 

- Advertisement -

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் முதலாவதாக ஹரிஷ் கல்யாண் நடிப்பதாகத்தான் இருந்தது. அதற்கான போஸ்டரையும் படக்குழு வெளியிட்டு இருந்தது. ஆனால் பல்வேறு சிக்கல்கள் காரணமாக அதிலிருந்து விலகினார் ஹரிஷ் கல்யாண். இதன் பிறகு ஸ்டாரின் கதாநாயகனாக வந்து இணைந்தார் கவின்.

 

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தின் டிரைலர் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. சாதாரண ஒரு இளைஞன், திரைத்துறையில் சாதிப்பதை ஒன் லைனாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருப்பது ட்ரெய்லரை பார்க்கும் போதே தெரிந்தது. அது மட்டுமல்லாமல் டிரைலரில் யுவன் சங்கர் ராஜாவின் இசை சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.

 

முகவரி திரைப்படம் போல் இதுவும் பெரிய அளவில் பேசப்படும் என்று கூறி வந்தனர். முக்கியமாக டிரைலரில், கவினின் நடிப்பு பலரையும் கவர்ந்தது. பல்வேறு கெட்டப்புகளில் அவர் படத்தில் வந்திருந்தார். இந்த திரைப்படம் குறித்து பேசிய இயக்குனர் இளன், தனது தந்தையை தூண்டுகோலாக வைத்தே இந்த திரைப்படத்தை எடுத்திருப்பதாக தெரிவித்தார்.

 

நடிகராக வேண்டும் என்ற அவரது ஆசை 50 வயது கடந்த பிறகு தான் நிறைவேறியதாகவும் அவர் கூறியிருந்தார். வரும் பத்தாம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில், படத்தில் கேமியோ ரோலில் ஒரு முக்கியமான நடிகர் நடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அது எந்த நடிகராக இருக்கும் என்று ரசிகர்கள் இப்போதே கேள்வி எழுப்பி வருகின்றனர். அனேகமாக அது சிவகார்த்திகேயனாக தான் இருக்கும் என்றும் ஒரு சிலர் இங்கு கூறி வருகின்றனர். அந்த கேமியோ ரோலிங் நடித்தவர் யார் என்பது இன்னும் இரண்டே நாட்களில் தெரிந்துவிடும்.

 

- Advertisement -

சற்று முன்