- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது... ரஜினி படத்துக்கே ஸ்பெஷல் ஷோ இல்லையா... ஓரங்கட்டப்படுகிறாரா சூப்பர் ஸ்டார்... ஏமாற்றத்தில் தலைவர் ரசிகர்கள்...

என்னது… ரஜினி படத்துக்கே ஸ்பெஷல் ஷோ இல்லையா… ஓரங்கட்டப்படுகிறாரா சூப்பர் ஸ்டார்… ஏமாற்றத்தில் தலைவர் ரசிகர்கள்…

- Advertisement -

கோச்சடையான், லிங்கா, கபாலி, தர்பார், அண்ணாத்த என வரிசையாக தோல்வி படங்களை கொடுத்துள்ள ரஜினிகாந்த், ஒரு மிகப்பெரிய வெற்றியை கொடுப்பதற்காக தவித்து வருகிறார். காலா, பேட்ட போன்ற திரைப்படங்கள் எதிர்பார்த்த வசூலை பெற்றிருந்தாலும், சூப்பர் ஸ்டாருக்கென ஒரு பிளாக்பஸ்டர் அந்தஸ்தை அந்த திரைப்படங்கள் பெறவில்லை. இப்படியான சூழலில்தான், கதை தேர்வில் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வரும் ரஜினிகாந்த், தனது அடுத்த படத்தை இயக்குனர் நெல்சனிடம் ஒப்படைத்து இருக்கிறார்.

கோலமாவு கோகிலா, டாக்டர் என இரண்டு தரமான வெற்றிகளை கொடுத்த நெல்சன், தளபதியை வைத்து பீஸ்ட் என்னும் திரைப்படத்தை இயக்கி சறுக்கினார். இருந்தபோதிலும், நெல்சன் மேல் முழு நம்பிக்கை வைத்த சூப்பர் ஸ்டார், அவருக்கு தனது படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார். இந்தப் படத்திற்கு ஜெயிலர் என தலைப்பிட்டு இருப்பதாகவும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் இதனை தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

- Advertisement -

படப்பிடிப்புத் தொடங்கிய சில நாட்களிலேயே, ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் என்னும் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னடத்தில் இருந்து சிவராஜ்குமார், தெலுங்கில் சுனில், பாலிவுட்டில் இருந்து ஜாக்கி ஜெரஃப் ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இதுபோக ரஜினிக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன், நகைச்சுவைக்கு யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி மற்றும் தமன்னா, வசந்த் ரவி உள்ளிட்டோரும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து சூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடந்து முடிக்க, ஒவ்வொரு அப்டேட்களும் வெளியாகின. அனிருத்தின் தெறிக்கும் இசையில், நு காவாலையா, டைகர் கா ஹுக்கும், ஜூஜூபி உள்ளிட்ட பாடல்கள் பெரும் வரவேற்பை பெற்றன. குறிப்பாக காவாலய பாடல் தமன்னாவின் நடன அசைவுகளுக்காகவே செம ஹிட் அடித்தது.

- Advertisement -

ஜெயிலர் படத்திற்கு படக்குழு யுஏ சான்றிதழ் அளித்துள்ளது. படம் இரண்டு மணி நேரம் 49 நிமிடங்கள் ஓடுவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. சமீபத்தில் ஜெயிலர் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ரஜினியின் பேச்சு வைரலாகிய நிலையில், வரும் மூன்றாம் தேதி படத்தின் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் 10 ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் ரிலீஸ் ஆகும் நிலையில், அதற்கு சிறப்பு காட்சிகள் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை நான்கு மணிக்கு ஜெயிலர் படத்தின் முதல் காட்சி இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், காலை 9 மணிக்குதான் படம் ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த ஆண்டில் வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரண்டு படங்களுக்கு மட்டுமே அதிகாலை சிறப்பு காட்சிக்கு அனுமதி கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்