- Advertisement -
Homeபொழுதுபோக்குகுபேரா பட விழாவில் நடிகர் தனுஷின் ஆவேசப் பேச்சு… மக்களுக்கு ஸ்பெஷல் எண்டர்டெயின்ட்மென்ட் தான் -...

குபேரா பட விழாவில் நடிகர் தனுஷின் ஆவேசப் பேச்சு… மக்களுக்கு ஸ்பெஷல் எண்டர்டெயின்ட்மென்ட் தான் – விளாசித் தள்ளிய பிரபலம்!

- Advertisement -

நடிகர் தனுஷ் நடித்த குபேரா படம் நாளை ( 20ம் தேதி) வெளியாக உள்ளது. சேகர் கம்முலா இயக்கத்தில் உருவான இந்த படம் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகிறது. இந்த படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கிறார். முக்கியமான கேரக்டரில் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா நடித்திருக்கிறார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் தனுஷ், என்னை பற்றி என்ன வதந்திகளை பரப்பினாலும் என் வளர்ச்சியை தடுக்க முடியாது. தம்பிகளா ஓரமா போய் விளையாடுங்க, ஒரு செங்கல்லை கூட ஆட்ட முடியாது என்று பேசியிருந்தார். அவர் பேசியது உச்சக்கட்ட தெனாவெட்டாகவும், அடாவடியான ஒரு பேச்சாகவும் இணையத்தில் மீம்ஸ் ஆக மாறி விமர்சனத்தில் இருந்து வருகிறது.

- Advertisement -

வழக்கமாக நடிகர் சிம்புதான் இப்படி ஏட்டிக்கு போட்டியாக பேசி வம்பில் சிக்குவது வழக்கம். ஆனால் அவர் இப்போது எவ்வளவோ மாறி அமைதியாகி விட்டார். தக்லைஃப் பட பிரமோ நிகழ்ச்சிகளில் பொறுமையாக நிதானமாக குறிப்பாக பொறுப்புடன் பேசி வருகிறார். இது ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், நடிகர் தனுஷ் இப்படி பேசியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

இதுகுறித்து ப்ளு சட்டை மாறன் தனது எக்ஸ் பதிவில் வெளியிட்ட ஒரு பதிவில் கூறியிருப்பதாவது, இது கலிகாலம். வெறுப்பு ஓங்கி நிற்கிற காலம். தம்பிகளா கொஞ்சம் தள்ளி போய் விளையாடுங்க. என்னை காலி பண்ணனும்னு நினைச்சா ஒரு செங்கல்ல கூட ஆட்ட முடியாது. தீப்பந்தம் போல என் ரசிகர்கள் உள்ளவரை நான் மேலே போயிட்டே இருப்பேன். தனுஷ் யாரை சொல்றாரு, எதுக்கு சொல்றாருன்னு யாருக்கும் புரியல. நயன்தாராவை சொல்றதா ஒரு குரூப் பேசுது. திடீர் தளபதிய திட்டுறதா இன்னொரு குரூப் பேசுது.

- Advertisement -

இந்த நடிகர்களுக்கு வெளிப்படையா பேசவும் தைரியம் இல்ல, பேசாம இருக்கவும் முடியல. ஒரே தமாசுதான். ஆடியோ டிரைலர் லாஞ்சகளை இப்படி ரசிகர் மன்ற கூட்டமா மாற்றுவதே பலருக்கு வேலையா போச்சு. இந்த மாதிரி ப்ரீ ரிலீஸ் பஞ்ச் எல்லாம் படம் வந்ததும் ட்ராவல் பண்ணத்தான் யூஸ் ஆகுது. படத்தை ஒழுங்கா எடுத்தா அதை மக்களே பாராட்டி பேசுவாங்க. இப்படி பேசுவதெல்லாம் பயங்கர சிரிஞ்ச் ஆகி ரொம்ப நாள் ஆனது. இன்னும் இவங்களுக்கு தெரியலையா?

இல்லன்னா தெரிஞ்சும் இப்படி பேசி இருக்கிற ரசிகர்களை ரசிக மனோபாவ மாய வலையை விட்டு வெளியே போயிடாம பார்த்துக்கிறார்களா? படத்துல பொழுதுபோக்கு இல்லைனாலும் இந்த மாதிரி ப்ரீ ரிலீஸ் பேச்சுகள் செம என்டர்டெயின்மெண்டா இருக்குடாப்பா. சாரோட மேடை மேனரிசம், டயலாக் டெலிவரி எல்லாம் தலீவர் பாணில இருக்கிறது மக்களுக்கு ஸ்பெஷல் என்டர்டெயின்மென்ட் என்று ப்ளூ சட்டை மாறன் கலாய்த்து இருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்