- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சமுத்திரக்கனி நடித்த திரு மாணிக்கம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு, அந்த படத்துக்கு போட்டியாக...

நடிகர் சமுத்திரக்கனி நடித்த திரு மாணிக்கம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு, அந்த படத்துக்கு போட்டியாக இந்த படம் அமையுமா?

- Advertisement -

நடிகர் சசிக்குமார் இயக்கி நடித்த சுப்ரமணியபுரம் படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் சமுத்திரக்கனி. தொடர்ந்து சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகள் படத்தில் சசிக்குமார் நாயகனாக நடித்திருந்தார். இந்த 2 படங்களுமே தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படங்களாக அமைந்தன.

தொடர்ந்து பல படங்களில் கதாநாயகனாக, வில்லனாக, சில படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார் சமுத்திரக்கனி. அவ்வப்போது படங்களை இயக்கவும் செய்கிறார். நடிகராக, இயக்குனராக தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் ஒரு ஜனரஞ்சக நடிகராக சமுத்திரக்கனி பவனி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சமுத்திரக்கனி நடித்த காலா அப்பா சாட்டை வடசென்னை வேலையில்லா பட்டதாரி விசாரணை ஏலே அடுத்த சாட்டை ரஜினி முருகன் ரைட்டர் டான் உள்ளிட்ட பல படங்களில் சிறப்பான நடிப்பை சமுத்திரக்கனி தந்திருந்தார். எந்த கேரக்டர் என்றாலும் பிசிறு தட்டாமல் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில், இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சமுத்திரக்கனி நாயகனாக நடித்த படம் திரு மாணிக்கம். இந்த படத்தில் சமுத்திரக்கனிக்கு ஜோடியாக அனன்யா நடித்துள்ளார். இயக்குனர் பாரதிராஜா நாசர் தம்பி ராமையா ஸ்ரீமன் கருணாகரன் இளவரசு வடிவுக்கரசி உளளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

- Advertisement -

தமிழக -கேரளம் எல்லை பகுதிகளான குமுளி மூணாறு மேகமலை தேக்கடி உள்ளிட்ட படங்களில் திரு மாணிக்கம் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் திரு மாணிக்கம் படத்தின் டப்பிங் பணிகளும் தற்போது நிறைவடைந்துள்ளன.

இன்றைய காலகட்டத்தில் நேர்மையாக ஒரு மனிதன் வாழ்வது சாத்தியமா, அப்படி நேர்மையாக வாழும்போது ஏற்படும் பிரச்சனைகள் குறித்த கதைக்களத்தில் இந்த படம் உருவாகியுள்ளது. திரு மாணிக்கம் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. வருகிற டிசம்பர் மாதம் 20ம் தேதி திரு மாணிக்கம் படம் வெளியாகிறது. இதே நாளில்தான் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 படமும் வெளியாக உள்ளது.

- Advertisement -

சற்று முன்