- Advertisement -
Homeபொழுதுபோக்குமாவீரன் படம் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்திய திருமாவளவன்

மாவீரன் படம் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்திய திருமாவளவன்

- Advertisement -

மடோன் அஸ்வின் இயக்கத்தில், நடிகர் சிவகார்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் மாவீரன். இந்த திரைப்படும் கடந்த வெள்ளிக் கிழமை திரையரங்குகளில் வெளியாகியது. இந்த திரைப்படத்தில் சிவகர்த்திகேயனுக்கு ஜோடியாக இயக்குநர் சங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்து இருந்தார்.

இதேபோல் மாவீர திரைப்படத்தில் மிஸ்கின், சரிதா உள்ளிட்ட பல்வேறு நடிகர்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தனர். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

- Advertisement -

இந்த திரைப்படம் திரையரங்குகளி வெளியாகி இன்றுடன் ஒருவாரம் ஆகும் நிலையில், இந்த படத்தின் வசூல் 50 கோடியை தாண்டியுள்ளதாக கூறப்படுகிறது. அதாவது கடந்த 6 நாட்களில் மட்டும் மாவீரன் திரைப்படம் 57 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக மாவீரன் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 34 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து மாவீரன் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் கூட்டம் அலைமோதி வரும் நிலையில், வசூல் மேலும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் ஒரு ஒரு திரையரங்கில் மாவீரன் படத்தை பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், அந்த படம் குறித்த தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். இது குறித்து அவர் பேசுகையில்,

- Advertisement -

சிவகார்த்திகேயன் இந்த படத்தில் தன்னுடைய நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார். அதிதி சங்கரின் நடிப்பும் மனம் கவரும்படி உள்ளது. சென்னையில் மக்களை தங்கள் வீடுகளில் இருந்து அப்புறப்படுத்தும் போது நானும் அந்த மக்களோடு களத்தில் நின்றுள்ளேன் என்ற முறையில், அத்தகைய காட்சிகளை படத்தில் பார்க்கும்போது என்னை அறியாமலேயே உணர்ச்சிவசப்பட்டேன்.

அந்த அளவிற்கு படத்தின் காட்சிகள் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது. அசரீரியின் குரல் கதாநாயகனை இயக்கும் காட்சிகள் ஈர்ப்பு தன்மை கொண்டதாக இருந்தது. கிளைமாக்சில் கதாநாயகன் வில்லனை பார்த்து எழுப்பும் கேள்விகள், மக்களின் குரலை பிரதிபலிப்பதாக இருந்தது என்று பாராட்டி உள்ளார் திருமாவளவன்.

- Advertisement -

சற்று முன்