- Advertisement -
Homeபொழுதுபோக்குவிடுதலை 2 படத்தை நான் நெனைச்ச மாதிரி எடுக்க முடியலே, அதுதான் இப்படி லேட் ஆயிடுச்சு...

விடுதலை 2 படத்தை நான் நெனைச்ச மாதிரி எடுக்க முடியலே, அதுதான் இப்படி லேட் ஆயிடுச்சு – உண்மையை போட்டுடைத்த வெற்றிமாறன்

- Advertisement -

இயக்குநர் வெற்றிமாறன் ஹீரோக்களை நம்பி படம் எடுக்காமல் கதையை நம்பி படம் எடுக்கும் ஆளுமை மிக்க படைப்பாளியாக தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார். இதனால் அவரது படங்கள் என்றாலே அது தனித்துவம் வாய்ந்ததாக இருக்கின்றன. அதனால் அவர் படங்களை எடுத்துமுடிக்க அதிக கால அவகாசம் தேவைப்படுகிறது.

வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், வடசென்னை, விடுதலை பாகம் 1 வரை. அந்த படங்கள் எல்லாமே மிகவும் கவனிக்கத்தக்க படங்களாகவே இருக்கின்றன. குறிப்பாக பொல்லாதவன் படம் மூலமாக, கிஷோர் என்ற ஒரு நல்ல நடிகரை நமக்கு தந்தவர். ஆடுகளம் படத்தில் நரேன் மிகவும் பேசப்பட்டார்.

- Advertisement -

அதே போல் அசுரன் படமும், வடசென்னை படங்களும் பேசப்பட்ட படங்களாக தனுஷ்க்கு அமைந்தன, அதுவரை காமெடி நடிகராக இருந்த சூரியை விடுதலை படம் மூலம் நாயகனாக்கியவர் வெற்றிமாறன். இப்போது தொடர்ந்து அவர் ஹீரோவாக படம் செய்து வருகிறார். அவரது படங்கள் திரைப்பட விழாக்களில் திரையிடும் அளவுக்கு பேசப்படும் படங்களாக இருக்கின்றன.

வெற்றிமாறன் சிறந்த இயக்குநர் என்பது மட்டுமின்றி படத்தில் நடிக்கும் ஹீரோ உள்ளிட்ட கேரக்டர்களுக்கு அவர் நடிக்க சொல்லிக் கொடுக்கிறார். அவர்களிடம் இருந்து அந்த கேரக்டருக்கான நடிப்பை வெளியே கொண்டு வருகிறார். அதனால் வெற்றிமாறனை நடிகராக்க இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், அமீர் போன்றவர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் அவர் மறுத்தார். இப்போது ட்ரெயின் படத்தில் டைரக்டர் மிஷ்கின் வேண்டுகோளுக்கு இணங்கி சில காட்சிகளில் அவர் நடிக்க சம்மதித்துள்ளார்.

- Advertisement -

இதற்கிடையே விடுதலை படம் இந்த ஆண்டின் துவக்கத்திலேயே வந்த நிலையில் 2வது பாகம் இன்னும் வெளிவரவில்லை. ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் எதிர்பார்க்கப்பட்ட இந்த படம், அடுத்த ஆண்டுதான் வெளியாகும் என்று தெரிகிறது. அதுவும் இன்னும் முடிவாக கூறப்படவில்லை.

விடுதலை 2 படம் தாமதம் குறித்து சமீபத்தில் மனம் திறந்து பேசிய இயக்குநர் வெற்றிமாறன், படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை பனிப்பொழிவில் படமாக்க திட்டமிட்டேன். 100 நாட்கள் முயற்சித்தும் அது நடக்கவில்லை. 4 ஆண்டுகள் ஆனாலும் அது சாத்தியமில்லை என்று தெரிந்த பிறகு, செயற்கை பனிப்பொழிவை உருவாக்கி படம் எடுத்தேன். அதனால்தான் திட்டமிட்ட கால அவகாசத்தில் படத்தை முடிக்க முடியாமல், அதிக நாள் தாமதம் ஏற்பட்டது, என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்