- Advertisement -
Homeபொழுதுபோக்குகணவரை பிரியும் திரௌபதி பட நடிகை... என்ன காரணம் தெரியுமா...

கணவரை பிரியும் திரௌபதி பட நடிகை… என்ன காரணம் தெரியுமா…

- Advertisement -

2020 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் திரவுபதி. வண்ணாரப்பேட்டை திரைப்படத்தின் மூலம் அறிமுகமான மோகன் ஜி இந்த திரைப்படத்தை எடுத்திருந்தார். இதன் முன்னோட்டமே மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்த, கடும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த திரைப்படம் வெளியானது. நடிகை ஷாலினியின் அண்ணன் ரிச்சர்ட் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.

இதில் நாயகியாக ஷீலா என்பவர் வந்தார். படத்தில் அவர், பெண்களுக்கு மட்டும் தான் மானமா? ஆண்களுக்கு இல்லையா என்று கேட்கும் வசனங்கள் கவனத்தை ஈர்த்தன. ஆனால் இந்த படத்தில் நடித்த பிறகு, தனக்கு அந்த கதாபாத்திரம் குறித்து என்னவென்று தெரியாது என்று பேசி இருந்தார் ஷீலா.

- Advertisement -

இவர் 2016 ஆம் ஆண்டு வெளியான ஆறாவது சினம் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பிறகு தனக்கு கிடைத்த சின்ன சின்ன கதாபாத்திரங்களை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஷீலாவை, நிறைய திரைப்படங்களில் காண முடிந்தது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெளியான அழகிய தமிழ் மகள் என்னும் சீரியலில், பூங்கொடியாக நடித்தார் ஷீலா.

இதன்பிறகு வெள்ளி திரையில் அவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்ததால், சீரியலை விட்டு வெளியே வந்தார். அசுரவதம், மனுசங்கடா படங்களில் வந்த அவர், டூலெட் திரைப்படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்தில் வெளியான கும்பலாங்கி நைட்ஸ் படத்திலும் ஷீலா தோன்றினார்.

- Advertisement -

மண்டேலா படத்தில் அவர் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரம் பலராலும் பேசப்பட்டது. தபால் நிலையத்தில் பணி புரியும் கிராமத்து பெண்ணாக வந்த அவர், யோகி பாபுவை கண்டிக்கும் காட்சிகளும், தனது உடல் மொழியாலும் பலரையும் கவர்ந்திருந்தார். சமீபத்தில் வெளியான நூடுல்ஸ் என்ற திரைப்படத்திலும் அவர் நடித்திருந்தார். திரையுலகில் மட்டுமல்லாமல் சமூக வலைதளத்திலும் ஆக்டிவாக இருக்கும் அவர், அடிக்கடி தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார்.

அவர் உதவி இயக்குனரான சோழன் என்பவரை திருமணம் செய்தார். இந்த நிலையில் ஷீலா திடீரென, திருமண உறவில் இருந்து வெளியே வந்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டு இருக்கும் அவர், திருமண உறவில் இருந்து நான் வெளியேறுகிறேன். நன்றியும் அன்பும் என்று பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நடிகை ஷீலாவுக்கு அவர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்