- Advertisement -
Homeபொழுதுபோக்குதக் லைப் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா... ஏதே... இந்தியன் படத்தின் இரண்டாம்...

தக் லைப் திரைப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா… ஏதே… இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் வசூலைக் கூட நெருங்கவில்லையா…

- Advertisement -

மிகப்பெரும் அளவில் எதிர்பார்க்கப்பட்ட தக் லைஃப் திரைப்படம், நேற்று திரையரங்குகளில் வெளியானது. மணிரத்னம் இயக்கியிருந்த இந்த திரைப்படத்தில், கமல்ஹாசன், சிலம்பரசன், திரிஷா, நாசர், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, அபிராமி உள்ளிட்ட ஏராளமானோர் நடித்திருந்தனர். ஏ ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார்.

இப்படி பக்காவான கூட்டணி அமைந்திருந்ததால், பலரும் இந்த திரைப்படம் குறித்து பேச ஆரம்பித்தனர். ஆனால் திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்று வருகிறது. முதல் பாதி ஓரளவு நன்றாக இருந்ததாகவும், ஆனால் இரண்டாம் பாதி சரி வர இல்லை எனவும் பலரும் கூறி வருகின்றனர்.

டெல்லியில் தனது அண்ணன் நாசருடன் இணைந்து பெரிய கேங்ஸ்டர் ஆக செயல்பட்டு வருகிறார் கமல்ஹாசன். அங்கு, அவருக்கு எதிராக ஒரு அரசியல்வாதியும் செயல்படுகிறார். இப்படியான சூழலில் கமல்ஹாசனை போலீசார் நெருங்க, அவரது உயிருக்கு ஆபத்தான சூழலில் சிறுவனாக இருக்கும் சிம்புவால் காப்பாற்றப்படுகிறார். அதே நிகழ்வில் சிம்புவின் தந்தையும் உயிரிழக்கிறார். தங்கை காணாமல் போகிறார்.

நிச்சயமாக உனது தங்கையை கண்டுபிடித்து தருகிறேன் என்று கமல்ஹாசன் சிம்புவிடம் உறுதிமொழி அளித்து தன்னுடனே வளர்க்க, அங்கிருந்து படம் ஆரம்பிக்கிறது. ஆரம்பத்தில் மிக நேர்த்தியாக கதையை செலுத்தி இருந்த மணிரத்னம், இரண்டாம் பாதியில் அதனை சரிவர கொண்டு செல்லவில்லை என்றுதான் கூற வேண்டும்.

குறிப்பாக இரண்டாம் பாதியை முழுக்க முழுக்க மசாலா நிறைந்த திரைப்படமாக அவர் எடுத்து வைத்து விட்டார். துரோகத்தால் வஞ்சிக்கப்படும் கமல்ஹாசன், அவர்களைப் பழி தீர்ப்பதற்காக இரண்டாம் பாதியில் எங்கெல்லாமோ செல்கிறார். இதனால் திரைப்படமும் நம்மை ஒரே இடத்தில் அமர வைக்காமல் பல திசைகளில் அலைய விடுகிறது. கதாபாத்திரங்களும் மனதில் பெருமளவு ஒட்டவில்லை என்று பலரும் கூறி வந்தனர்.

ஏற்கனவே தக் லைப் திரைப்படம் கர்நாடகாவில் வெளியாகாமல் இருந்த சூழலில், இந்தியாவின் மட்டும் இந்த திரைப்படம் ஒரே நாளில் 17 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வந்த போது, அது முதல் நாளில் 25 கோடி ரூபாய் குவித்து இருந்தது. ஆனால் அந்த வசூலை கூட இது நெருங்கவில்லை என்று பலரும் சொல்லி வருகின்றனர்.

சற்று முன்