இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் சிம்பு முதன்முறையாக இணைந்து நடித்த படம் தக்லைஃப் வருகிற ஜூன் 5ம் தேதி திரைக்கு வருகிறது. இன்னும் சரியாக 19 நாட்களே உள்ள நிலையில் இந்த படத்தை காண ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பும் ஆர்வமும் அதிகரித்து வருகிறது.
மெட்ராஸ் டாக்கீஸ் ரெட்ஜெயின்ட் மூவிஸ் நிறுவனங்களின் இணை தயாரிப்பில் இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம்தான் தயாரித்துள்ளது. படத்தில் திரிஷா அபிராமி நாசர் மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோரும் இணைந்து நடித்திருக்கின்றனர். ஏஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார்.
நேற்று தக்லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியாகி பெரிய அளவில் ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது. இதில் கமலிடம் சிறுவனாக வந்து சேரும் சிம்புதான், பின்னாளில் பெரிய டான் ஆக மாறுகிறார். தந்தை மகன் போல வாழ்கின்றனர். ஆனால் கடைசியில் கமலும் சிம்புவுமே ஆக்ரோஷமாக மோதிக்கொள்ளும் காட்சிகளும் வருகின்றன.
இந்த படத்தில் நடிகர் சிம்புவுக்கு திரிஷா ஜோடி என்றும் நடிகை அபிராமி முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்கிறார் என்றும்தான் ஆரம்பத்தில் தகவல் பரவியது. ஆனால் டிரெய்லரில் வரும் காட்சிகளில் அபிராமியை கட்டிப்பிடித்து முத்தமிடுகிறார் கமல். மற்றொரு காட்சியில் திரிஷா, கமலின் தாடியை பிடித்து கொஞ்சி விளையாடுகிறார்.
டிரெய்லரில் வரும் இந்த காட்சிகளை பார்க்கும் போது கமலுக்கு அபிராமி திரிஷா இருவருமே ஜோடி போல தான் உணர முடிகிறது. அதே நேரத்தில் சிம்பு நிஜ வாழ்க்கையில் மட்டுமின்றி தக்லைஃப் படத்திலும் முரட்டு சிங்கிளாக தான் காட்டப்படுகிறார் என்பதும் உறுதியாகிறது. ஆக கமலுக்கு 70 வயதில் 2 கதாநாயகிகளாக என டிரெய்லர் பார்த்த ரசிகர்கள் அனல் மூச்சு விடுகின்றனர்.
ஆனால் தக்லைஃப் படம் ஜிங்குச்சா பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய கமல், ஷூட்டிங் நடந்த போது அபிராமி திரிஷா இருவரில் ஒருவர் கூட எனக்கு ஒருமுறை கூட ஐ லவ் யூ சொல்லவில்லை என வருத்தப்பட்டது போல பேசினார். ஆனால் டிரெய்லரில் வரும் காட்சிகளில் கமல் திரிஷா, கமல் அபிராமியின் நெருக்கமான காட்சிகளை பார்த்தால் ஐ லவ் யூ சொல்லாமல், அதை விட நெருக்கமாக கமலுடன் அவர்கள் நடித்திருப்பதை சுட்டிக்காட்டி வெளிப்படுத்துகிறது.





