சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய தயாரிப்பாளர் வினியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் கூறியதாவது, ஏழு எட்டு ஆண்டுகளுக்கு முன்னாடி ஒரு தயாரிப்பாளர் ஒரு இயக்குனரை வெச்சு படம் எடுக்கிறார். அந்த டைரக்டருக்கு 10 லட்சம் ரூபாய் சம்பளம் தர்றார். அதுதான் இயக்குனருக்கு முதல் படம். அப்போதே 2வது படத்துக்கும் அவரை கமிட் செய்த தயாரிப்பாளர் 20 லட்சம் ரூபாய் சம்பளம் அக்ரிமென்ட் போடுகிறார். அடுத்து கொஞ்சம் பிரபலமான ஒரு ஹீரோவை வெச்சு தயாரிப்பாளர் படம் பண்ணும்போது அந்த டைரக்டர் 1 கோடி ரூபாய் தயாரிப்பாளரிடம் சம்பளம் கேட்கிறார். அப்புறம் பேசி 75 லட்சம் ரூபாய் சம்பளம் என்று முடிவானது. 70 சதவீதம் படம் முடிஞ்சதும் ஹீரோவுக்கும் டைரக்டருக்கும் படம் திருப்தியில்லாமல் அப்படி ஓரமா தூக்கி போட்டுட்டாங்க. மறுபடியும் ரிஷூட் பண்ணியும் 4 வருஷமா அந்த படம் ரிலீஸ் ஆகலே. இந்த படத்துக்காக தயாரிப்பாளர் பைனான்சியர் கிட்ட வாங்கின நாலரை கோடி ரூபாய் கடன், இப்போ வட்டியோட 9 கோடி ரூபாய் ஆகியிருக்கு. அப்போ நான் சொன்னேன். நீங்க தயாரிப்பாளர் எல்லாம் முதுகெலும்பு இல்லாம இருக்கறீங்க. பிரஸ்சை கூப்பிட்டு டைரக்டர் பத்தி சொல்லுங்க. இந்த மாதிரி விஷயங்களை எந்த தயாரிப்பாளரும் சொல்றது கிடையாது. நடிகர்கள் பண்ற அட்ராசிட்டி டைரக்டர்கள் பண்ற அட்ராசிட்டி காமெடி நடிகர்கள் பண்ற அட்ராசிட்டியை கேமரா முன்னாடி முதுகெலும்போட தைரியமா நின்னு சொல்றது கிடையாது அதுதான் இவங்க எல்லாம் இத்தனை ஆட்டம் போடறாங்க. இதுக்கெல்லாம் காரணம் தயாரிப்பாளர்களுடைய கோழைத்தனம் தான் என்று திருப்பூர் சுப்ரமணியம் அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார்.





