- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் படங்கள் தொடர் தோல்விக்கு ஹீரோக்களே காரணம்… இயக்குனர்களை அவர்கள் செயல்பட விடுவது இல்லை -...

தமிழ் படங்கள் தொடர் தோல்விக்கு ஹீரோக்களே காரணம்… இயக்குனர்களை அவர்கள் செயல்பட விடுவது இல்லை – திருப்பூர் சுப்ரமணியன் நேரடி தாக்குதல்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய நிர்வாகியாக பல ஆண்டுகளாக இருந்து வருபவர் திருப்பூர் சுப்ரமணியன். சென்னையில் இன்று நடந்த சிறை பட விழாவில் விநியோகஸ்தர், மல்டிபிளக்ஸ் தியேட்டர் உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கலந்துக்கொண்டு பேசினார். அப்போது தமிழ் சினிமா ஹீரோக்கள் குறித்து அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் திருப்பூர் சுப்ரமணியன் பேசியதாவது, ஒரு படத்தின் வெற்றி என்பது இயக்குனர் கையில் தான் இருக்கிறது. ஹீரோவை புகழ்வதை விட இயக்குனரை பற்றி பேசினால் அது வெற்றிப்படம். 16 வயதினிலே படத்தில் பாரதிராஜாவை பற்றி தான் பேசினாங்க. ரஜினி கமல் ஸ்ரீதேவி பற்றி யாரும் பேசவில்லை.

- Advertisement -

சுவரில்லா சித்திரங்கள் மௌன கீதங்கள் படங்கள் வந்த சமயத்தில் பாக்யராஜ் பத்தி பேசினாங்க. புலன்விசாரணை கேப்டன் பிரபாகரன் படங்கள் வந்தபோது ஆர் கே செல்வமணி பற்றி பேசினாங்க. அந்த படங்கள் எல்லாம் பெரிய வெற்றி படங்கள். இப்படி டைரக்டர் பேசப்பட்டு அவர்கள் சொல்கிறபடி நடிகர்கள் கேட்டால் அந்த படம் பெரிய ஹிட் ஆகும்.

இப்போது தமிழில் வெற்றி படங்கள் குறைவாக இருக்க நடிகர்களின் தலையீடு தான் காரணம். அவங்க தலையீடு இல்லாமல் இருந்தால் இன்னும் நிறைய வெற்றி படங்கள் உருவாகி இருக்கும். இயக்குனர் மனதில் நினைப்பதை படத்தில் சொல்ல முடிவதில்லை. ஒரு படம் ஆரம்பிக்கும் போதே அதை தனது குழந்தை மாதிரி வளர்க்கிறார் இயக்குனர். அதை கை கால் பிய்த்தால் என்ன ஆகும்?

- Advertisement -

அந்த காலத்தில் 100 படங்கள் வந்தால் 80 படங்கள் வெற்றி பெறும். ஹீரோ தலையீட்டுக்கு பின் அந்த வெற்றி விகிதம் குறைந்தது. சிறை திரைப்படத்தில் எல்லோரும் அந்தந்த கேரக்டர்களுக்கு உயிர் கொடுத்து இருக்கிறார்கள். இதில் விக்ரம் பிரபு ஹீரோ. அற்புதமான நடித்திருப்பதாக சொல்கிறார்கள். அவர் அப்பா பிரபு கூட படம் நல்லா இருக்குது நீங்க பாருங்க என்று எனக்கு மெசேஜ் அனுப்பி இருக்கிறார்.

2025ம் ஆண்டில் சினிமா மோசமாக இருக்கிறது. எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு மோசமான சூழல் வந்தது. அடுத்த ஆண்டாவது சினிமா நன்றாக இருக்கட்டும் என்று திருப்பூர் சுப்ரமணியன் இந்த விழாவில் வெளிப்படையாக தனது கருத்துகளை பேசியிருக்கிறார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்