- Advertisement -
Homeபொழுதுபோக்குஅஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கும் 51வது படம், டைட்டில் போஸ்டர் வெளியீடு -...

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கும் 51வது படம், டைட்டில் போஸ்டர் வெளியீடு – பேரை கேட்டாலே சும்மா அதிருதுல்ல!

- Advertisement -

நடிகர் மற்றும் இயக்குனர் டி ராஜேந்தரின் மூத்த மகன் சிம்பு என்கிற சிலம்பரசன். இவரை ரசிகர்கள் எஸ்டிஆர் என்றும் அன்பாக அழைக்கின்றனர். லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற படத்தை குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் போதே, ரசிகர்களால் பெற்றவர். நடிப்பில் இசையில் நடனத்தில் இயக்கத்தில் தந்தை டிஆரை போலவே மகன் எஸ்டிஆரும் கலக்கி கொண்டிருக்கிறார்.

சிலம்பரசன் நடித்த பல படங்கள் தமிழ் சினிமாவில் வெற்றிப் படங்களாக இருந்திருக்கின்றன. குறிப்பாக வல்லவன் மன்மதன் கோவில் சரவணா தம் குத்து என பல வெற்றிப் படங்களை கொடுத்த அவர், நடிப்பிலும் நடவடிக்கையிலும் சீனியர் நடிகராக நவரச நாயகன் கார்த்திக் போல ஒரு கட்டத்தில் நடந்துக் கொண்டார்.

- Advertisement -

படப்பிடிப்பில் பிரச்னை செய்வது, படப்பிடிப்பு வராமல் எஸ்கேப் ஆகி விடுவது, சம்பளம் கேட்டு பிரச்னை என பல விதங்களில் இவர் கெட்ட பெயரை சம்பாதித்தார். ஆனால் சமீபகாலமாக சிம்புவிடம் நிறைய நல்ல மாற்றங்கள் தெரிகிறது. தன்னை ஒரு நல்ல கலைஞனா தமிழ் சினிமாவில் நிலை நிறுத்திக்கொள்ள அவர் ஆயத்தமாகி வருகிறார்.

வெங்கட்பிரபு இயக்கிய மாநாடு படம் சிம்புவுக்கு பெரிய வெற்றிப் படமாக இருந்து கம்பேக் கொடுத்தது. அடுத்து கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு படமும் வரவேற்பை பெற்றது. ஆனால் பத்துதல படம் போதிய வெற்றியை தரவில்லை. அடுத்து கமலுடன் சிம்பு நடித்த மணிரத்னம் படம் தக்லைப் வருகிற ஜூன் 5ம் தேதி வெளியாக உள்ளது.

- Advertisement -

இந்நிலையில் நேற்று முன்தினம் 3ம் தேதி, சிம்பு தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது அவர் நடிக்க உள்ள 3 படங்கள் குறித்த அப்டேட் வெளியானது. பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் படம், அஸ்வத் மாரிமுத்து இயக்கும் படம் மற்றும் தேசிங்கு பெரியசாமி இயக்கும் படம் என 3 படங்களில் சிம்பு நடிப்பதை உறுதி செய்திருக்கிறார்.

இதில் தனது 50வது படத்தை முதன்முறையாக நடிகர் சிம்புவே அட்மன் சினி ஆர்ட்ஸ் என்ற தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் சார்பில் சொந்தமாக அவரே தயாரிக்கிறார். இந்த படத்தை தேசிங்கு பெரியசாமி டைரக்ட் செய்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். அடுத்து சிம்பு நடிக்கும் 51வது படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அஸ்வத் மாரிமுத்து இயக்கும் இந்த படத்துக்கு காட் ஆப் லவ் என டைட்டில் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. டைட்டிலே சும்மா மிரட்டுதே என எஸ்டிஆர் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

- Advertisement -

சற்று முன்