- Advertisement -
Homeபொழுதுபோக்குகீற்றுக் கொட்டகைக்கு கிரீடம் சூட்டியது உன் பாடல், பாமரர் நாவில் பழமொழியானது உன் பல்லவி -...

கீற்றுக் கொட்டகைக்கு கிரீடம் சூட்டியது உன் பாடல், பாமரர் நாவில் பழமொழியானது உன் பல்லவி – கவியரசருக்கு பிறந்த நாள் கவிதை எழுதிய கவிஞர் வைரமுத்து!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கவியரசர் என்ற புகழுக்கு சொந்தக்காரர் கண்ணதாசன். கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்பதை போல கண்ணதாசன் பெயரை சொன்னாலே கவிதை வரும் என் புகழுரை சொல்பவர்கள் உண்டு. கடந்த 1927ம் ஆண்டில் ஜூன் மாதம் 24ம் தேதி இதே நாளில் பிறந்தவர்தான் கண்ணதாசன்.

இன்று அவருக்கு 99 வயது நிறைவடைந்து 100வது வயது அதாவது தனது நூற்றாண்டை மறைந்த பிறகும் தனது அழியாத கவித்துவத்தால் தொடர்கிறார் கவியரசு கண்ணதாசன். திரைக்கவிஞராக அவரது பாடல்கள் இன்றும் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கின்றன. மண்ணை விட்டு மறைந்தால் மக்கள் மனங்களில் வாழ்ந்து வரும் கவியரசுக்கு கவிஞர் வைரமுத்து வாழ்த்துகளை பதிவு செய்திருக்கிறார்.

- Advertisement -

கவிஞர் வைரமுத்து தனது முகநூல் பக்கத்தில் இன்று செய்துள்ள பதிவில் கூறியிருப்பதாவது, கவியரசே! பிறப்பு முதல் இறப்பு வரை தமிழர் வாழ்வைத் தழுவி நடக்கிறது உன் தமிழ். கீற்றுக் கொட்டகைக்கு கிரீடம் சூட்டியது உன்பாடல். பாமரர் நாவில் பழமொழியானது உன் பல்லவி.

மொழியின் சகல செளகரியங்களையும் பாட்டுக்குள் பரிமாறியவன் நீ. மதுவோ மதமோ கீதையோ கோதையோ நீ எதை எழுதினாலும் உன் தமிழுக்கு மயங்கியது தமிழச்சாதி. எறும்புத்தோலை உரித்துப்பார்த்து யானை கண்டவன்; இதயத்தோலை உரித்துப்பார்த்து ஞானம் கண்டவன்.

- Advertisement -

கலவியைத் துன்பம் போன்ற இன்பம் என்றவன். தன்னைக் கண்ணீர் வரைந்த ஓவியம் என்றவன். பாவேந்தரைத் தொடர்ந்து திரையில் கவிதை செய்த பெருங்கவிஞன் கடந்த நூற்றாண்டில் கால்நூற்றாண்டின் கையொப்பம் நீயல்லவா? உன் கைத்தமிழைவிட கானத் தமிழுக்கு ஆயுள் அதிகம்.

கண்ணின் மணிபோல மணியின் நிழல்போலக் கவிதை படைத்தாய் அய்யா! இந்த மண்ணும் கடல் வானும் மறைந்து முடிந்தாலும் மறக்க முடியாதய்யா. உன் தமிழைப் பிரிக்க முடியாதய்யா. உன் நூற்றாண்டை இன்று தொடங்குகிறாய்; நாங்கள் நிறைவு செய்வோம் என்று அந்த பதிவில் கவிஞர் வைரமுத்து கவிதை பாடியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்