- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடேங்கப்பா குட் பேட் அக்லி திரைப்படத்தில் மட்டும் இத்தனை ரெட்ரோ பாடல்கள் வருகிறதா... எண்ணிப் பார்ப்பதற்கே...

அடேங்கப்பா குட் பேட் அக்லி திரைப்படத்தில் மட்டும் இத்தனை ரெட்ரோ பாடல்கள் வருகிறதா… எண்ணிப் பார்ப்பதற்கே ஏழு நாட்கள் ஆகும் போலயே…

- Advertisement -

அஜித் குமார் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் வெளியாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம், நேற்று வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. யாருமே எதிர்பார்க்காத வகையில் முழுக்க முழுக்க மாஸ் காட்சிகளை வைத்திருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். படம் தொடங்கியது முதல் இறுதி வரை ஒரே மாஸ் காட்சிகள் தான்.

சொல்லப்போனால் ஒரு தீவிரமான அஜித் ரசிகர் படம் எடுத்தால் எப்படி இருக்கும் என்பதை தான் காட்டி இருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். அதில் அவர் எந்த ஒரு லாஜிக்கையும் பார்க்கவில்லை. கமர்சியல் கலந்த மசாலா படத்தை ஜாலியாக கொடுக்க வேண்டும் என முடிவு செய்து அதில் கிட்டத்தட்ட வெற்றியும் பெற்றிருக்கிறார்.

- Advertisement -

குடும்ப உறவு வேண்டும் என்பதற்காக செய்த தவறுகளுக்கு சிறையில் இருக்கும் அஜித் குமார், தனது மகனுக்கு பிரச்சினை என்று வரும்போது அனைத்தையும் பிரேக் செய்து மீண்டும் டான் ஆகிறார். பின்னர் என்ன நடக்கிறது என்பதைத்தான் இந்த திரைப்படம் கூறி இருக்கிறது. படத்தில் அர்ஜுன் தாஸ் மிரட்டி இருக்கிறார்.

சொல்லப்போனால் அஜித்திற்கு அடுத்து அவருக்கு சிறிது முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் இயக்குனர். அதையும் மிகச் சரியாக பயன்படுத்தி அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். படத்தில் ஆங்காங்கே வரும் ஆக்சன் காட்சிகள், இடைவேளையில் விஜய் வசனத்தை கூறும் அஜித் குமார், இரண்டாம் பாதியில் அஜித்தின் பிளாஷ்பேக் காட்சிகள் என அனைத்தும் ரசிக்கும் வகையிலேயே உள்ளது.

- Advertisement -

இதுபோக ரசிகர்களை கொண்டாட வைப்பதற்காக, ஆங்காங்கே ரெட்ரோ பாடல்களையும் வைத்திருக்கிறார். ஆனால் அதனை சற்று அதிகமாகவே அவர் வைத்து விட்டார் என்று தான் கூற வேண்டும். சகலகலா வல்லவன் படத்தில் இருந்து இளமை இதோ இதோ பாடலை வைத்துள்ளார். ஒத்த ரூபாயும் தாரேன் பாடலும் அர்ஜுன்தாஸ் அறிமுகத்தின்போது ஒலிக்கிறது.

இதுபோக த்ரிஷாவும் அர்ஜுனும் முதல் முறையாக பார்க்கும் போது கிரீடம் திரைப்படத்திலிருந்து ஒரு பாடல் வருகிறது. கேமியோ ரோலில் சிம்ரன் நடித்திருக்க, அங்கு வாலி திரைப்பட பாடலை சொருகி இருக்கிறார். ஏன் ஜோடி மஞ்ச குருவி, ஆலுமா டோலுமா பாடல்களும் வருகின்றன. சுல்தானா பாடலும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக இன்ஸ்டாகிராமில் வரும் டப்பிங் பாடலையும் படத்தில் வைத்திருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.

- Advertisement -

சற்று முன்