- Advertisement -
Homeபொழுதுபோக்கு2023 ஆம் ஆண்டில் உலக அளவில் அதிக வசூல் ஈட்டிய டாப் 10 தமிழ் திரைப்படங்கள்...

2023 ஆம் ஆண்டில் உலக அளவில் அதிக வசூல் ஈட்டிய டாப் 10 தமிழ் திரைப்படங்கள் எவை… இதோ ஒரு பார்வை…

- Advertisement -

2024 ஆம் ஆண்டை வரவேற்பதற்காக உலக மக்கள் தயாராகி வருகின்றனர். அதேசமயம் 2023 இல் நடந்த சம்பவங்கள், நிகழ்ச்சிகள், சோகங்கள் உள்ளிட்டவை குறித்தும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். திரைத்துறையிலும், வசூல் சாதனை செய்த திரைப்படங்கள், அறிமுகமான இயக்குனர்கள், சிறந்த பாடல்கள் சிறந்த படங்கள் போல் உள்ளிட்டவை குறித்து பட்டியல் தயாராகி வெளியாகி வருகிறது.

இதில் தற்போது, உலக அளவில் அதிக வசூல் செய்த டாப் 10 தமிழ் திரைப்படங்களின் லிஸ்ட் ரெடியாக உள்ளது. இதில் பத்தாம் இடத்தில் இருப்பது, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம். ராகவா லாரன்ஸ் எஸ் ஜே சூர்யா நடிப்பில் எடுக்கப்பட்டிருந்த இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார். எப்போதும் வித்தியாசமான கதைக்களத்தை கையில் எடுக்கும் கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தை சரியான விதமாக கையாண்டிருந்ததால், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் மிகப்பெரிய வெற்றியை ருசித்தது.

இந்த பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருப்பது மாமன்னன். பரியேறும் பெருமாள் கர்ணன் படங்களை எடுத்த மாரி செல்வராஜ் இதனை இயக்கியிருந்தார். வடிவேலு உதயநிதி ஸ்டாலின் பக்கத்து பாசில் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருந்த இந்த திரைப்படம், நாற்காலி அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட்டு நல்ல வரவேற்பையும் பெற்றது. எட்டாவது இடத்தில் இருப்பது மாவீரன் திரைப்படம். சூப்பர் ஹீரோ கான்செப்ட் என்றாலும் வித்தியாசமான கதைகளத்தில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தை ரசித்தனர் ரசிகர்கள்.

இந்த பட்டியலில் ஏழாவது இடத்தில் இருப்பது மார்க் ஆண்டனி திரைப்படம். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியான இந்த திரைப்படம், எஸ் ஜே சூர்யா வின் திறமையான நடிப்பால் மெகா ஹிட் அடித்தது. ஆறாவது இடத்தில் வாத்தி திரைப்படம் உள்ளது. கலையான விமர்சனத்தை இது பெற்றாலும், வசூல் ரீதியாக கலெக்ஷன் அள்ளியது.

அஜித்தின் துணிவு திரைப்படம் ஐந்தாவது இடத்தில் உள்ளது. நேர்கொண்ட பார்வை வலிமை என அஜித்திற்கு அடுத்தடுத்து இரண்டு சுமாரான திரைப்படங்கள் அமைந்த நிலையில், இந்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றித் திரைப்படமாக அமைந்தது. நான்காவது இடத்தில் வாரிசு உள்ளது. துணிவு படத்தை பார்க்கையில் கலவையான விமர்சனத்தையே இந்த திரைப்படம் பெற்றாலும், குடும்ப ஆடியன்ஸ்கள் இதற்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்ததால் வசூலை அள்ளியது வாரிசு.

மூன்றாவது இடத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் உள்ளது. இந்த வருடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய லியோ திரைப்படம் இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. முதல் இடத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் உள்ளது. அண்ணாத்த பட தோல்விக்கு பிறகு, மிகப்பெரிய வெற்றி அடைந்த ஜெயிலர் திரைப்படம், அவருக்கு சிறந்த கம் பேக் ஆகவும் அமைந்தது.

சற்று முன்