- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரதீப் ரங்கநாதனை தொடர்ந்து இளம் இயக்குனர் பட்டியலில் இருந்து நடிகராக மாறும் பிரபலம்... அடடே இவரா...

பிரதீப் ரங்கநாதனை தொடர்ந்து இளம் இயக்குனர் பட்டியலில் இருந்து நடிகராக மாறும் பிரபலம்… அடடே இவரா என ஆச்சரியப்படும் ரசிகர்கள்…

- Advertisement -

தமிழ் சினிமாவில் தற்போது இளம் இயக்குனர் ஆகவும் நடிகராகவும் ஒரே நேரத்தில் சாதனை படைத்திருப்பவர் பிரதீப் ரங்கநாதன். இவரது முதல் திரைப்படமாக அமைந்தது கோமாளி. ரவி மோகன் கதாநாயகனாக நடித்திருந்த இந்த திரைப்படத்தின் இறுதிக் காட்சியில் ஒரு சிறிய கேமியோ ரோலில் வந்திருப்பார் பிரதீப் ரங்கநாதன். இந்த திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

அதன்பிறகு லவ் டுடே என்னும் திரைப்படத்தை இயக்கி அதில் கதாநாயகனாக அவரே நடித்தார். இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்ப எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம், 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. அது மட்டுமல்லாமல், மிகவும் கவனிக்கத்தக்க நபராக மாறினார் பிரதீப் ரங்கநாதன்.

- Advertisement -

இது நாள் வரை இயக்கத்தில் மட்டும் கவனம் செலுத்தி இருந்த அவர் அடுத்ததாக முழு நேர நடிகராக மாறினார். இந்த முறை அஸ்வந்த் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதனை வைத்து இயக்க, டிராகன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி சக்கை போடு போட்டது. வெறும் 30 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 150 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்தது.

இதனைத் தொடர்ந்து மோஸ்ட் வான்டட் பெர்சனாக மாறியிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். அவரது திரைப்படங்களுக்கு இப்பொழுது தமிழ் சினிமாவில் நல்ல மார்க்கெட் கிடைத்துள்ளது. தற்போது அவர் ஹீரோவாக நடித்து வரும், dude திரைப்படத்திற்கான ஓடிடி உரிமம் 25 கோடி ரூபாய்க்கு சென்றிருக்கிறது. netflix நிறுவனம் தான் இவ்வளவு பெரிய தொகையை கொடுத்து இந்த திரைப்படத்தை வாங்கி இருக்கிறது.

- Advertisement -

இப்படி பிரதீப் ரங்கநாதன் சிகரத்தின் உச்சிக்கு செல்ல தற்போது மேலும் ஒரு இயக்குனர் நடிகராக மாறி இருக்கிறார். அவர் வேறு யாரும் அல்ல, டூரிஸ்ட் பேமிலி என்னும் மிகப்பெரிய ஹிட் திரைப்படத்தை கொடுத்த அபிஷன் ஜீவிந்த்தான். இவரது இயக்கத்தில் கடந்த மே மாதம் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி லாபகரமான திரைப்படமாக அமைந்தது.

படத்தின் பட்ஜெட்டை தாண்டி பத்து மடங்கு இந்த திரைப்படம் வசூல் செய்ததாக சொல்கிறார்கள். இதனைத் தொடர்ந்து பலரது பார்வையும் இயக்குனர் மீது திரும்ப அவர் அடுத்ததாக ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. கரெக்ட்டட் மச்சி என்னும் திரைப்படத்தில் ஹீரோவாக அவர் நடிக்கிறாராம். அனஸ்வர ராஜன் ஹீரோயின் ஆக நடிப்பதாக தகவல் கசிந்து உள்ளது.

- Advertisement -

சற்று முன்