தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் த்ரிஷா. பல வருடங்களாக ஹீரோயினாக நடித்துவரும் அவர் தற்போது விஜய்க்கு ஜோடியாக லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கிறார். குருவி படத்துக்கு பிறகு த்ரிஷா விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் விஜய்யும் – த்ரிஷாவும் கணவன் மனைவியாக நடித்திருக்கிறார்கள். ட்ரெய்லரில் இருவருக்குமான கெமிஸ்ட்ரி மிக அழகாக இருந்ததால் கண்டிப்பாக முழு படத்திலும் சூப்பராக இருக்கும் என்று எதிர்பார்த்திருக்கின்றனர் ரசிகர்கள். அக்டோபர் 19ஆம் தேதி படம் ரிலீஸாகவிருக்கிறது. படத்தின் ப்ரீ டிக்கெட் புக்கிங்க் தொடங்கி ஜரூராக நடந்துவருகிறது. கண்டிப்பாக படம் மெகா ஹிட்டடிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.
லியோ படத்துக்கு பிறகு த்ரிஷா விடாமுயற்சி படத்தில் நடிக்கவிருக்கிறார். இதற்காக அவர் தற்போது அஜர்பைஜானில் இருக்கிறார். கடந்த சில வருடங்களாக முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாகும் வாய்ப்பு த்ரிஷாவுக்கு பெரிதாக அமையவில்லை. ஆனால் இப்போது அதாவது பொன்னியின் செல்வன் படத்துக்கு பிறகு அந்த வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தவும் செய்திருக்கிறார் த்ரிஷா. அதேபோல் அவர் மீண்டும் லைம் லைட்டுக்கு வர இன்னொரு காரணமும் கூறப்படுகிறது. அதாவது நயன்தாரா திருமணம் செய்துகொண்டு இரண்டு குழந்தைகளை பெற்றுக்கொண்டார். குழந்தைகள் பெற்ற பிறகு அவர் நடித்தாலும் முன்னர் போல் படங்கள் அதிகமாக ஒத்துக்கொள்வதில்லை. அதுமட்டுமின்றி ஜவான் படத்தின் வெற்றி அவரது கவனத்தை பாலிவுட் பக்கம் திருப்பியிருக்கிறது. எனவே இந்த கேப்பையும் த்ரிஷா கெட்டியாக பிடித்துக்கொண்டார் என்றும் கூறுகிறார்கள்.
இந்நிலையில் அவர் லியோ படத்துக்காக வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி த்ரிஷா லியோவுக்காக 5 கோடி ரூபாய் வாங்கியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. லியோ படமும், விடாமுயற்சி படமும் ஹிட்டாகும்பட்சத்தில் கண்டிப்பாக அடுத்தடுத்த படங்களில் சம்பளத்தை உயர்த்தி நயன்தாரா இடத்துக்கு வந்துவிடுவார் என்று கருதப்படுகிரது. நயன் பத்து கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.





