- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் வில்லியாக நடிக்கும் திரிஷா... அதுவும் இந்த ஹீரோவுக்கு எதிராகவா... அய்யய்யோ என்ன ஆகப்போகுதோ தெரியலையே...

மீண்டும் வில்லியாக நடிக்கும் திரிஷா… அதுவும் இந்த ஹீரோவுக்கு எதிராகவா… அய்யய்யோ என்ன ஆகப்போகுதோ தெரியலையே…

- Advertisement -

தமிழ் சினிமாவில் முதலில் துணை நடிகையாக அறிமுகம் ஆகி பின்னர் ஹீரோயின் ஆக வலம் வந்தவர் திரிஷா. 20 ஆண்டுகளுக்கு மேலாக கதாநாயகியாக அந்தஸ்து பெற்று விளங்கி வரும் அவர் இங்கு தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார்.

 

- Advertisement -

ரஜினி கமல் விஜய் அஜித் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்த அவர், கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்திலும் நடித்தார். ஆனால் அந்த திரைப்படங்கள் எல்லாம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இதனால் தற்போது மீண்டும், பெரிய பெரிய கதாநாயகர்கள் படத்திலே கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்.

 

- Advertisement -

இந்த இடைப்பட்ட காலத்தில் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது 96 திரைப்படம் தான். ஜானகி கதாபாத்திரத்தில் வந்த அவர், ஒவ்வொரு காட்சியிலும் ரசிகர்கள் மனதை கொள்ளை அடித்தார். தனது அனுபவம் மிக்க முதிர்ச்சியான நடிப்பிலும், பாராட்டைப் பெற்றார் திரிஷா.

 

தொடர்ந்து விஜய்யுடன் லியோ, அஜித் உடன் விடாமுயற்சி ஆகிய திரைப்படங்களில் திரிஷா நடித்திருக்கிறார். தற்போது வெளியாக இருக்கும் கோட் திரைப்படத்தின் ஒரு பாடலுக்கும் திரிஷா நடனம் ஆகி இருக்கிறார். இதுபோக குட் பேட் அக்லி திரைப்படத்திலும் அவர் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

 

தொடர்ந்து கதாநாயகியாகவே நடித்து வந்த திரிஷா, ஒரு மாறுதலுக்காக கொடி படத்தில் வில்லியாக நடித்தார். அரசியல்வாதியாக நடித்திருந்த அவரது கதாபாத்திரம் அந்த சமயத்தில் பரவலாக பேசப்பட்டது. ஆனால் இதன் பிறகு வில்லியாக நடிப்பதை திரிஷா தவிர்த்தே வந்தார்.

 

இப்படியான சூழலில் தான் தற்போது அந்த கேரக்டரில் நடிக்க அவர் ஒத்துக் கொண்டிருக்கிறார். அதுவும் தமிழில் அல்ல தெலுங்கில். அர்ஜுன் ரெட்டி, அனிமல் ஆகிய திரைப்படங்களை இயக்கிய சந்திப், அடுத்ததாக பிரபாஸை வைத்து ஸ்பிரிட் என்னும் திரைப்படத்தை எடுக்கிறார். இதில் பிரபாஸுக்கு இரண்டு கதாபாத்திரம். போலீஸ் மற்றும் வில்லன் என இரண்டு ரோலில் அவர் நடிக்கிறார். இதில் வில்லியாக திரிஷா நடிக்க இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

- Advertisement -

சற்று முன்