- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது... சூர்யாவின் 45 ஆவது திரைப்படத்தில் அவருக்கு ஜோடி கிடையாதா... அப்போ திரிஷாவுக்கு இப்படி ஒரு...

என்னது… சூர்யாவின் 45 ஆவது திரைப்படத்தில் அவருக்கு ஜோடி கிடையாதா… அப்போ திரிஷாவுக்கு இப்படி ஒரு ரோலா… ஆர் ஜே பாலாஜி என்ன சார் இதெல்லாம்…

- Advertisement -

ஆரம்ப கட்டத்தில் ரேடியோ ஜாக்கியாக வலம் வந்தவர் ஆர் ஜே பாலாஜி. அங்கிருந்து, தனது பயணத்தை தொடங்கிய அவர், திரைப்படங்களின் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டார். இதில் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது நானும் ரவுடிதான் திரைப்படம். தனது காமெடி கவுன்டர்களால் அந்த படத்தின் மூலம் பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்தார் ஆர்.ஜே பாலாஜி.

 

இதே போல் தீயா வேலை செய்யணும் குமாரு திரைப்படமும், ஆர்.ஜே பாலாஜி காமெடியை ரசிக்க வைத்தது. இங்கிருந்து சரியான திசையில் பயணித்த அவர், எல் கே ஜி திரைப்படத்தின் கதாநாயகனாக நடித்து ஷாக் கொடுத்தார். அதே சமயம் விமர்சன ரீதியாக இந்த திரைப்படம் வரவேற்பை பெற்றது.

 

இதற்குப் பிறகு, தனது நண்பர் சரவணகுமார் உடனுடன் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தை இயக்கினார் ஆர் ஜே பாலாஜி. இதில் அம்மன் கதாபாத்திரத்தில் நடித்தார் நயன்தாரா. திரையரங்குகளில் வெளியாகாமல், நேரடியாக ஓடிடி தளத்தில் இந்தத் திரைப்படம் வெளியிடப்பட்டது. படம் சுமாரான விமர்சனத்தை பெற்றாலும், விமர்சன ரீதியாக மூக்குத்தி அம்மன் ரீச் ஆனது.

 

இதனைத் தொடர்ந்து சிங்கப்பூர் சலூன், ரன் பேபி ரன் உள்ளிட்ட திரைப்படங்களில் ஆர் ஜே பாலாஜி நடித்தார். இது ஒரு பக்கம் இருக்க, மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை, வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக அறிவித்தது. ஏற்கனவே அதன் முதல் பாகத்தை அதுதான் எடுத்திருந்தது. இதில் நயன்தாரா இடம் பெறுவார் எனக் கூறப்பட்டிருந்த சூழலில், இயக்குனரின் இடத்தில் யார் பெயரும் இல்லை.

 

இதனால் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்திலிருந்து ஆர் ஜே பாலாஜி வெளியேறுவது உறுதியானது. அதே சமயம் அது சுந்தர் சி கைக்கு சென்று விட்டதாகவும் கூறப்பட்டது. இந்த சூழலில், மாசாணி அம்மன் திரைப்படத்தை எடுக்க திட்டம் போட்டார் ஆர் ஜே பாலாஜி. இதில் திரிஷா நடிப்பதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் ட்விஸ்ட் கொடுத்தனர்.

 

திடீரென சூர்யாவின் படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான படப்பிடிப்பு கோவையில் தொடங்கி இருக்கிறது. இதில் த்ரிஷாவும் நடிக்கிறார். அவருக்கு வக்கீல் கதாபாத்திரத்தை பாலாஜி கொடுத்திருக்கிறார். அதேபோல் இதில் சூர்யாவுக்கு ஜோடி கிடையாதாம். இந்த தகவல்களால் ரசிகர்கள் ஆச்சரியப்பட்டுள்ளனர்.

 

சற்று முன்