- Advertisement -
Homeபொழுதுபோக்குஎத்தனை கோடி சம்பளம் தந்தாலும் அந்த படத்தில் நடிக்க மாட்டேன், நடிகை திரிஷா எடுத்த...

எத்தனை கோடி சம்பளம் தந்தாலும் அந்த படத்தில் நடிக்க மாட்டேன், நடிகை திரிஷா எடுத்த திடீர் முடிவு – இந்த விவகாரத்துல தளபதி பேரும் அடிபடுதே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் 43 வயது கடந்தும் 23 ஆண்டுகளாக முன்னணி நட்சத்திர நாயகியாக வலம் வருபவர் நடிகை திரிஷா. 2003ம் ஆண்டில் லேசா லேசா என்ற படம் மூலம் நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமான திரிஷா தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். தமிழில் நயன்தாரா போல இவரும் அதிக சம்பளம் வாங்குகிறார்.

இந்நிலையில் ரஜினி கமல் இணைந்து நடிக்கும் ஒரு புதிய படத்தை ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரிக்க உள்ளது. பான் இந்தியா படமாக உருவாக உள்ள இந்த படத்தில் 47 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் சினிமாவின் ஜாம்பவான்கள் நடிகர்கள் ரஜினி கமல் இருவரும் இணைந்து நடிக்க உள்ளனர். நெல்சன் படத்தை இயக்குகிறார். அனிருத் இசையமைக்க உள்ளார்.

- Advertisement -

இதுவரை தமிழ் சினிமாவில் எந்த படமும் 1000 கோடி ரூபாய் வசூலை எட்டியது இல்லை. அதனால் இந்த படம் அப்படி ஒரு சாதனையை படைக்க வேண்டும் என்கிற திட்டத்தில் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இந்த படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. ரஜினி தனது 173வது படத்தில் நடித்த பிறகு இந்த படம் ஷூட்டிங் துவங்க முடிவாகி உள்ளது.

இந்நிலையில் ரஜினி கமல் இணைந்து நடிக்கும் படத்தில் ரஜினி வில்லனாகவும் கமல் ஹீரோவாகவும் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நடிகை திரிஷா நாயகியாக நடிக்கிறார் என்றும் தகவல் வெளியானது. இதற்காக ரூ. 12 கோடி சம்பளம் பேசியதாகவும் கூறப்பட்டது. ஏற்கனவே தக்லைஃப் தூங்காவனம் மன்மதன் அம்பு படங்களில் கமல் திரிஷா இணைந்து நடித்திருக்கின்றனர்.

- Advertisement -

ஆனால் இப்போது இந்த படத்தில் நடிகை திரிஷா நடிக்க மறுத்துவிட்டதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எத்தனை கோடி சம்பளம் என்றாலும் இந்த படத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று திரிஷா வெளிப்படையாக கூறிவிட்டார் என்றும் கூறப்படுகிறது. இதற்கு காரணம் திரிஷாவின் நெருங்கிய நண்பர் தமிழக முதல்வர் விஜய்தான் என்றும் கூறப்படுகிறது.

முதல்வர் விஜய் திரிஷா நட்பு அனைவரும் அறிந்ததுதான். ரஜினி கமல் இணைந்து நடிக்கும் படத்தை உதயநிதி ஸ்டாலின் மகன் இன்பன் உதயநிதி தான் தனது ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். விஜய் குறித்து திமுக எதிர்கட்சி தலைவராக உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து வருகிறார். இப்படிப்பட்ட சூழலில் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தயாரிக்கும் ஒரு படத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று திரிஷா கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

சற்று முன்